வெற்றி இயக்குனருடன் ‘சீயான்’ விக்ரமின் அடுத்த படம் விரைவில் துவங்கும்

வேல்ஸ் இன்டர்நேஷனல்-ன் ஐசரி கணேஷ் தயாரித்த ‘கோமாளி’ படத்தின் ‘ஜெயம்’ ரவி யோகி பாபு, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெட்ஜ் மற்றும் பலர் நடித்தார்கள். இப்படத்தை புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கினார். தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்ததால் ஐசரி கணேஷ், நான் அடுத்து தயாரிக்கும் படத்தை பிரதீப் ரங்கநாதன் தான் இயக்குவார் என்று கூறினார்.

அதன்படி, ஐசரி கணேஷ் தயாரிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கதாநாயகனாக ‘சீயான்’ விக்ரமை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

‘சீயான்’ விக்ரம் தற்போது நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும். அதற்கான முன்னேற்பாடு வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *