சீன நாட்டின் வவ்வால் மூலம் கொரோனா? கனடா மான் மூலம் ஜாம்பியா?

சமீபத்தில், இணையத்தளங்களில் அதிகம் பகிரப்படும் பேசப்பட்டும் வரும் செய்து. கனடாவில் கொரோனாவை விட கொடூரமான ஜாம்பி நோய் பரவி வருகிறது என்பது தான் இது கனடா நாட்டிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இந்த நோய் ஒவ்வொரு மனிதராக பரவி அவர்களை பேய் பிடித்தவர்கள் போல நடந்து கொள்ள வைக்கும். எளிமையாக சொன்னால் ‘ஜெயம் ரவி’ நடிப்பில் வெளியான ‘மிருதன்’ படத்தை போன்று தான்.

இப்படியான ஒரு வியாதி சமீபத்தில் பரவி வருவதாக ஒரு அதிர்ச்சிகர செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.

கனடா நாட்டில் உள்ள மான்களுக்கு இடையே Chronic Wasting Disease (CWD) என்ற நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கனடா நாட்டின் அல்பெர்டா, சாஸ்கட்ச்வான் ஆகிய பகுதிகளில் இந்த நோய் மான்கள் மத்தியில் பரவி வருவதாக கூறப்படுகிறது. அனைத்து வகை மான் இனங்களுக்கு மத்தியிலும் இந்த நோய் பரவி வருகிறது.

இந்த நோயின் வரலாறு !

இந்த நோய் முதன் முதலில் 1960ல் அமெரிக்காவின் கண்டுபிடிக்கப்பட்டது. இது மெல்ல மெல்ல அமெரிக்காவின் 26 மாகாணங்களில் பரவியது. தற்போது இதே நோய் தற்போது கனடாவில் பரவி வருகிறது.

மனித இனத்திற்கு அச்சம் ?

இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளை அடித்து சமைத்து சாப்பிட்டாலோ, அந்த விலங்கு நம்மை கடித்தாலோ இந்த நோய் மனிதர்களுக்கு பரவவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோய்கிருமிகள் மனித ரத்தத்துடன் கலந்து விட்டால் அது மனித உடலுக்குள் பரவ துவங்கிவிடுவாம். இது மட்டுமல்ல இந்த நோய் பாதித்த விலங்குகளை கையாண்டால் கூட அந்த கிருமிகள் மனித உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திகைத்து நிற்கும் ஆராச்சியாளர்கள்

இந்த நோய் மிருகங்களுக்கு பாதிக்கப்பட்டதும் அது நேரடியாக அதன் மூளையை தாக்கி மிருகம் அதன் கட்டுப்பாட்டை இழக்கிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட மிருகங்கள் வாயில் வழக்கத்தை விட அதிகமாக எச்சில் வடிவது, மற்ற மிருகங்களுடன் சேராமல் இருப்பது, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைககள், அதிகமாக நீர் வெளியேறுவது, உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் உள்ளன.

அதனால் மனிதர்களுக்கு இது போன்று நடந்தால் மனிதர்களும் ஜாம்பிகளாக மாற வாய்ப்புது. அவ்வாறு நடந்தால் அதற்கான தீர்வு என்னவென்று தெரியாமல் திகைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *