சரமாரியாக உயர்த்தப்பட்ட பீஸ்ட் படத்தின் கட்டணம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிலும் அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து யூடியூபில் 250 மில்லியன் பார்வையாலர்களை கடந்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பல சாதனைகளையும் படைத்தது. இன்னும் சில தினங்களே ரிலீசுக்கு உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை 3 மடங்கு வரை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கட்டண உயர்வுக்கு அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து சென்னையிலும் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சியின் கட்டணம் ரூபாய் 1000த்தை தாண்டியுள்ளது. இருப்பினும் ரசிகர்களின் ஆர்வத்தால் டிக்கெட்டுகளுக்கு டிமாண்ட் ஏறிக்கொண்டே இறுக்கிறது.

பீஸ்ட் படத்தின் 3வது பாடல் இன்று மாலை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *