சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடி.,யில் வெளியிடப்பட உள்ளது. ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்று, சர்வதேச கவனத்தை ஈர்த்த நிலையில், டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
எதற்கும் துணிந்தவன் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என கவனத்தை ஈர்த்த படம் எதற்கும் துணிந்தவன். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர், சென்டிமென்ட், சோஷியல் மெசேஜ் என அனைத்தும் கலந்த கலவையாக எடுக்கப்பட்ட இந்த படம் மார்ச் 4 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் சூர்யா படம் ரிலீஸ் என்பதால் ரசிகர்களின் உற்சாகம் சற்று அதிகமாகவே இருந்தது. சத்தமே இல்லையேப்பா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்று, ரசிகர்கள் கொண்டாடிய படமாக அமைந்தது. பொதுவாக தியேட்டரில் ரசிகர்கள் படம் பார்க்கும் போது விசில் சத்தம் காதை கிழிக்கும். ஆனால் பெரும்பாலான சீன்களில் சத்தமே இல்லாமல் படத்துடன் ரசிகர்கள் ஒன்றிப் போய் பார்த்த படமாக எதற்கு துணிந்தவன் அமைந்திருந்தது.
ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா தியேட்டர்களில் கலக்கியதை தொடர்ந்து ஓடிடியிலும் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. எதற்கும் துணிந்தவன் தியேட்டரில் ரிலீசானதுமே ரசிகர்கள் எப்போ ஓடிடி ரிலீஸ் என கேட்க துவங்கி விட்டனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஏப்ரல் 7 ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் தளங்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட இதை எதிர்பார்க்கவேயில்லையே அது மட்டுமல்ல, தமிழ் புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஏப்ரல் 14 ம் தேதி மாலை 6.30 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படம் ஒளிபரப்பப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தகவலாக அமைந்துள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளதாம்.