சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் மூன்றாவது பாடல் ‘லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு’ வெளியானது !
குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் , குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள். அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா இசையமைக்கிறார் .
ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , மூன்றாவது பாடலான ‘லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு’ இன்று வெளியாகி உள்ளது .
பாடகர் முகேஷ் இந்த பாடலை பாடியுள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் .
Song link – https://bit.ly/3Azxlrw
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்கம் : சுந்தர் .சி
தயாரிப்பு நிறுவனம் : அவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்,தளபதி தினேஷ் ,பிரதீப் தினேஷ்
நடனம்:பிருந்தா,தினேஷ்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்
வசனம் :- அப்பா ஞானபண்டிதா
வடிவேலா
நான் ஒரு பாடல் பாடட்டுமாவசனம் 2 : பாடும் பாடித் தொலையும்பல்லவி :-
குழு :-
லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு
பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு
லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு
பஜக்கு பஜக்கு லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு பஜக்குமாஹீரோ :-
வாம்மா மின்னலு – நான்
இப்ப மொரட்டு சிங்கலு
ஏம்மா ஏஞ்சலு – கேப்புல
விட்டா சைக்கிளு
ஏ கககபோ
சொல்லிட்டுப் போ
டிக்டாக் பண்ணி மனசு
ஒரு GPS ஆ
கூட்டிட்டு போ
ஜிக்ஜாக் ஆனா வயச
wire ரு இல்லா மின்சாரம் – என்
உசுர வாங்கும் சம்சாரம்
அதுவாக நீ மாறனும்
சரணம் :-
ஹீரோ :-
ஏ லவ்வு மேல லவ்வையும் வச்சி
என் உசுர மேலயும் தச்சி
தந்துடுவேன் உன்னோட கைமேல
அவதார் படத்த கூட
Blue ஆ இருக்குதுன்னு
இப்பவர பாக்கல கண்ணால
சத்தியம் பண்ணுவேன் வாடி – நான்
ரொம்ப உத்தமண்டி
சத்தியம் தியேட்டர் போல – உன்னை
கெத்தா பாத்துப்பேண்டி
விவேக் :- நான் பட்டக்கடன் தீரணுமே
யோகிபாபு :- தங்கம் வந்து சேரணுமே
ஹீரோ :- google அ போல நான் தூங்காம தேடுறேண்டி
குழு :-
காதலு டிமிக்கி கொடுக்கும் – ஒன்ன
ஓடவிட்டு பின்ன மிதிக்கும்
அப்புறம் பின்னால வலிக்கும் – அட
லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு பஜக்கு பஜக்கு