பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கான திரைப்படம் ‘அதையும் தாண்டி புனிதமானது’

கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை  சொல்லும்  ‘அதையும் தாண்டி புனிதமானது’!

வேல்’ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘அதையும் தாண்டி புனிதமானது’.

ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா, குஷி, வீன் ஷெட்டி, வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன்  கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..? என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது.

இந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன்றவர்கள் கலக்கி இருக்கிறார்கள்.

திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- V.K.கண்ணன்,  எடிட்டிங் – ஆர்.கே, இயக்கம் –ஆர்.வெங்கட்டரமணன்,
தயாரிப்பு நிர்வாகம் – மதுரை சி.ஆர்.முத்துப்பாண்டி.

தயாரிப்பு – N.பழனிவேல். மேலும் Dr.K. கருணாகரன், பாண்டிச்சேரி K. பிரகாஷ், வெள்ளோடு நாக முருகேசன், கோடி வெங்கட்லெஷ்மி, கோபாலகிருஷ்ணன், A. ராமசாமி,  Dr.A. அப்துல் கபூர், P.கணேஷ், A. ஆரோக்கியராஜ், ராசினாம்பட்டி A.C.ராஜுத்தேவர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *