நகைச்சுவை நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

இன்றைய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் என்றால் உச்சத்தில் இருப்பது யோகி பாபு தான். வெளியாகும் அனைத்து படங்களிலுமே நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் நகைச்சுவை நடிகரானார். பின்னர் வடிவேலு சந்தானம் வரிசையில் சமீபத்தில் வெளியான ‘தர்ம பிரபு’ படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

தான் நடிக்கும் படத்தின் விழாவிற்கு கூட வர முடியாத அளவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் இவரிடம் ஒரு முறை திருமணத்தைப் பற்றி கேட்டபோது, வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

இந்நிலையில், திடீரென்று இன்று (05.02.2020) காலை மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணம் இவரது குலதெய்வ கோயிலில் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற மார்ச் மாதம் சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *