வெற்றி, அக்ஷயா, சாப்ளின் பாலு, சாய் தீனா, வினு ப்ரியா நடிப்பில், முருகன் இயக்கி நடித்திருக்கும் படம் “பகலரியான்”.
தமிழ் சினிமாவின் புது யுக்தி தான் அந்தோலோஜி. ஆனால், அதில் சில வேறு கதைகளை அதற்குண்டான முடிவுகளை கொடுத்து படமாக்குவர். ஆனால், இப்போதோ இரு கதைக்களங்களை வெவ்வேறு களங்களில் நகர்த்திக் கொண்டு அதன் மையப்புள்ளியை ஒரே இடத்தில் கொண்டு சேர்த்து ஒரே முடிவை கொடுப்பது தான் புதிய ட்ரெண்டாக மாறியள்ளது அந்த வகையில் பெரிய ஹிட் அடித்த படம் என்றால் மாநகரம். அதனின் தொடர்ச்சியாக பல படங்கள் அந்த பாணியில் வெளியாகியிருந்தாலும் சுவாரசியமாகவும் திரைக்கதை அமைப்பாகவும் ரசிகர்களை கவர்ந்தது வெகு சில படங்களே அந்த லிஸ்டில் இணைந்துள்ள படம் “பகலரியான்” என்று தான் சொல்ல வேண்டும்.
கதைப்படி,
நாயகன் வெற்றி, தனது காதலியுடன் வெளியூர் சென்று செட்டிலாகி விட நினைக்கும் ஒரு ரெளடி. அதற்காக காதலியான அக்ஷயா கந்தமுதன், வீட்டை விட்டு ஓடி வருகிறார்.
தனது உயிருக்கு உயிரான தங்கையை காணவில்லை என்று மற்றொரு கேங்க்ஸ்டராக வரும் முருகன், ஊர் முழுவதும் தனது ஆட்களை வைத்து தேடி அலைகிறார்.
இந்த சமயத்தில் பழைய பகையை தீர்ப்பதற்காக முருகனை வட்டமிடுகிறது ஒரு கும்பல்.
அதேசமயம், வெற்றியை கொலை செய்வதற்காக ஒரு கும்பலும் துரத்துகிறது.
இந்த கதைகள் ஒரு புள்ளியில் இணைகிறது. அந்த மையப்புள்ளி தான் படத்தின் முடிவு.
“வுல்ப்” என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் ரவுடி தான் வெற்றி. என்ன தான் கெட்ட பழங்களை கொண்டவராக இருந்தாலும் கெட்டவன் இல்லை என்ற கதாபாத்திரம் தான் இவரின் பாத்திரம். இவர் நடிப்பில் வெளியாகிய படங்களின் மத்தியில் இப்படத்தில் இவரின் நடிப்பு வரவேற்கதக்கது. சண்டை காட்சிகளில் சிறப்பு சேர்த்துள்ளார் வெற்றி.
“மார்ட்டின்” பாத்திரத்தில் நடித்த முருகன் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். க்ளைமாக்சில் அவரின் நடிப்பு அற்புதம்.
ஹீரோயின் அக்ஷயாவுக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் அவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.
பல ஆண்டுகளுக்கு பின் நடிக்க வந்திருக்கிறார் சாப்ளின் பாலு. சமீபத்தில் அவரின் நடிப்பில் உருவான கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் அவரை மீண்டும் திரைக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து இப்போது மீண்டும் மக்களிடையே ரிஜிஸ்டர் ஆகியுள்ளார் சாப்ளின்.
படத்தின் பெரிய ப்ளஸ் விவேக் சரோவின் இசை தான். பல பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைக்க தடுமாறி வரும் சூழலில் இசையில் மிரட்டியுள்ளார் விவேக். அவருக்கு தனி பாராட்டுக்கள்.
முதல் பாதியிலேயே கதையை ஓரளவாவது வெளிக்காட்டியிருந்தால் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால் அது அனைத்தையும் இரண்டாம் பாதியில் சேர்த்து திருப்தி அளித்துவிட்டார் இயக்குனர் முருகன்.
பகலரியான் – ஹை ஆக்டேன் த்ரில்லர்.