சமீப காலமாக பெண் குழந்தைகள் சிறு வயதில் படும் இன்னல்களையம், பாலியல் ரீதியாக துன்புறுத்தப் படுவதையும் மையமாக வைத்து சில படங்கள் வந்துக் கொண்டிருக்கிறது. அமேசான் பிரைமில் வெளியான “சூழல்” இணையத் தொடர் மிகப்பெரும் தாக்கத்தை கொடுத்தது.
இதை தொடர்ந்து, இன்று வெளியாகியுள்ள “கார்கி” மற்றும் “இரவின் நிழல்” திரைப்படங்களும் அதையே பேசுகிறது.
சில ஆண்டுகளுக்குள்ளாக சென்னையிலுள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 16 பேர் கொண்ட கொடூர கும்பல் பெண் குழந்தையை கற்பழித்தது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது பலரும் அறிந்த ஒன்றே. அதை மையமாக வைத்தும் மிக அழுத்தமான வசனங்களை கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் கார்கி.
மேலும், குழந்தை பருவத்திலே தாயை இழந்த ஆண் பிள்ளை. சமூதாயத்தில் எப்பேர்ப்பட்ட இன்னல்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறது. என்ற ஆழமான கதையை கொண்ட திரைப்படம் இரா.பார்த்திபன் இயக்கிய “உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட்” திரைப்படம் “இரவின் நிழல்”.
இரு கதைகளும் குழந்தைகளை மையமாக கொண்ட அழுத்தமான கதைக்களத்தை கொண்டுள்ளது. இப்படத்தை பார்க்கும் அணைத்து பெற்றோர்களுக்கும் ஒரு விதமான தெளிவு கிடைக்கும் என்று கூட சொல்லலாம். ஆகையால் கட்டாயம் இவ்விரண்டு படங்களையும் தவற விட வேண்டாம்.
கார்கி திரைவிமர்சனம் படிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
இரவின் நிழல் படத்தின் திரைவிமர்சனம் விரைவில் பதிவு செய்யப்படும்.