Skip to content
August 12, 2026
Ilanchoorian.com – Tamil News | Health | Tamil Cinema | Technology | Sports News

Ilanchoorian.com – Tamil News | Health | Tamil Cinema | Technology | Sports News

  • Home Trend
  • செய்திகள்latest news in tamil online
    • தேசிய செய்திகள்India News
    • உலக செய்திகள்World news online
    • தமிழகம்tamilnadu-news
    • விளையாட்டு செய்திகள்sports news online
    • வீடியோ
  • சினிமாcinema-news-online
    • சினிமா செய்திகள்
    • EventsMovie Events online
    • ExclusivesMovie Exclusives online
    • Interviews
    • Photo ShootsMovie Photo Shoots online
  • GalleryMovies Gallery online
    • ActorsActors gallery online
    • ActressActress gallery online
    • Movie Wall PapersMovie Wall Papers
  • விமர்சனம்Movie reviews online
  • அரசியல் செய்திகள்
  • VideosVideos
    • InterviewsInterviews
    • Promos
    • Songs
    • Teasers
    • Trailers
  • Home
  • Home Trend
  • ‘மை டியர் டாலி’ வருமானத்தின் ஒரு பகுதி புற்றுநோய் குழந்தைகளுக்கு – தயாரிப்பாளர் எம்.ஜே. சிவராமகிருஷ்ணா அறிவிப்பு

Contact Us

69, 2nd Floor, Sivanandha Nagar,
17th Street, Senthil Nagar,
Kolathur, Chennai - 99.
E-mail ID : ilanchoorian123@gmail.com

  • Home Trend

‘மை டியர் டாலி’ வருமானத்தின் ஒரு பகுதி புற்றுநோய் குழந்தைகளுக்கு – தயாரிப்பாளர் எம்.ஜே. சிவராமகிருஷ்ணா அறிவிப்பு

hemalatha6 months ago01 mins

மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் – தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு

 

வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மை டியர் டாலி”. அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக சிவராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு திரைத்துறை கடந்து வரவேற்பும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, படத்தின் வருவாயில் ஒருபங்கை புற்றுநோயை எதிர்த்து போராடும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதாக தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா அறிவித்து இருப்பது மனிதம் மீதுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு, மேலும் பலரை இப்படி செய்யவும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

மை டியர் டாலி திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி கே சேகர் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சித்தார்த் மேற்கொண்டுள்ளார். எம். ஃபாஸில் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நிர்வாக தயாரிப்பு பணிகளை ஆர்.திருமலை மேற்கொண்டுள்ளார்.

Tagged: Anupama actress Aravind Raj director Balaji K Sekar cinematography blood cancer awareness Tamil movie Jayaramachandran producer Kollywood updates M Fazil music M J Sivarama Krishnan My Dear Dolly movie My Dear Dolly Tamil movie Siddharth editor Simma Moorthy Cinemas Tamil cinema charity Tamil film release news Tamil movie donation news Tamil social awareness film VJ Bappu

Post navigation

Previous: ‘மை லார்ட்’ நன்றி அறிவிப்பு விழா | வெற்றி நடை போடும் சசிகுமார் – ராஜு முருகன் படம்
Next: ‘தாய் கிழவி’ ப்ரீ ரிலீஸ் நிகழ்வு | ராதிகா கலக்கிய நடிப்பு – பிப்ரவரி 27 ரிலீஸ்

Related News

ஆகஸ்ட் 7 முதல் Prime Video-வில் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ உலகளாவிய ஸ்ட்ரீமிங்!

hemalatha2 weeks ago 0

யோகி பாபு – ரெடின் கிங்ஸ்லி இணையும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா கோலாகலம்!

hemalatha1 month ago 0

*“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!* முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.., “அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இப்படம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு உத்வேகத்தை அளிக்கும். மேலும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளரின் பணியையும் பாராட்டிய அவர், படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. “அங்கீகாரம்” யாரும் தவறவிடக் கூடாத படம் என்றும், அனைவரும் திரையரங்குகளில் பார்த்து படத்திற்கு இன்னும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. நடிகை இசபெல்லா பேசியதாவது.., “அங்கீகாரம்” எனக்கு கிடைத்த முதல் அடையாளம். இதுவரை மேடையேறி பேசியதில்லை. முதன்முறையாக இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றி. இயக்குநர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து, இந்தப் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தார். கே ஜெ ஆர் சார் மிகவும் கம்ஃபர்ட்டாக நடிக்க வைத்தார். படத்தில் எனக்கு ‘தங்கமயில்’ என்ற பெயர் வைத்ததற்கும் நன்றி. ஜிப்ரான் சாரின் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரைப் போன்ற கலைஞருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு முழுவதும் என்னை ஊக்கப்படுத்தினார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை இவ்வளவு அழகாக திரையில் காட்டிய எடிட்டர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” நடிகை வசுந்தரா பேசியதாவது, “அங்கீகாரம் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். சினிமாவுக்காக தேவையில்லாத மிகைப்படுத்தல்களை சேர்க்காமல், வாழ்க்கைக்கு நெருக்கமான முறையில் முக்கியமான ஒரு கருத்தை இயக்குநர் தென்பாதியான் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கே.ஜெ.ஆர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய மாற்றமும், அர்ப்பணிப்பும் மிகவும் பிரமிக்க வைத்தது. பீட்டர் ஹெயின் மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஜிப்ரான் சாரின் இசை எப்போதும் போல அற்புதமாக அமைந்துள்ளது. அருண், பிரசாந்த், அஜித் ஆகிய இளம் தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒரு கதையை நம்பி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படம் வெற்றி பெற்றால்தான் இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாகும். இந்தப் படத்தையும் உங்கள் மனதில் இடம் கொடுத்து, தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.” இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது.., “அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த விமர்சனங்களும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதற்காக அனைவருக்கும் என் நன்றி. கே.ஜெ.ஆர் தயாரிப்பாளராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும், சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அடுத்த படமும் அதுபோன்ற முக்கியமான கருத்தை பேசும் படமாக இருக்கும். ஒரு கதைக்குள் மனிதர்களின் உணர்வுகளை இயல்பாக கொண்டு வருவது மிகவும் கடினம். அதை இயக்குநர் தென்பாதியான் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கதையின் எழுத்து மிகவும் வலுவாக உள்ளது. இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாக, உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். குறிப்பாக இரண்டாவது வாரத்திலும் இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நன்றி.” சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசியதாவது.., “அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த பாராட்டும், நேர்மையான விமர்சனங்களும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. புதுமுக ஹீரோவான கே.ஜெ.ஆர் மீது எனக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்திற்காக அவர் எடுத்த உழைப்பும், உடல்மாற்றமும், அர்ப்பணிப்பும் சாதாரணமானது அல்ல. ஒரு தடகள வீரராக திரையில் இயல்பாகத் தோன்றுவதற்காக கடுமையாக உழைத்துள்ளார். இந்தப் படத்தின் பின்னால் இயக்குநர் தென்பாதியான் , கே.ஜெ.ஆர், தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் கடின உழைப்பு இருக்கிறது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்காக இயக்குநருக்கு என் பாராட்டுகள். இந்தப் படத்திற்காக நாங்களும் பல மாதங்கள் ஆய்வு செய்து பணியாற்றினோம். படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்தனர். குறிப்பாக மூன்று தயாரிப்பாளர்களின் ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது. ஒளிப்பதிவாளரும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். அங்கீகாரம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான படம். அனைவருக்கும் நன்றி.” ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத் பேசியதாவது.., “இயக்குநர் தென்பாதியான் காட்சிகளை முன்கூட்டியே தெளிவாக கற்பனை செய்து வைத்திருப்பார். அதனால் பல சவாலான இடங்களில்கூட, கஷ்டங்கள் இருந்தாலும் அதே இடத்தில் படமாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அந்த நம்பிக்கையால்தான் படத்தின் காட்சிகள் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளன. ஸ்போர்ட்ஸ் காட்சிகளை படமாக்கும்போது பீட்டர் ஹெய்ன் மாஸ்டருடன் பணியாற்றுவது ஆரம்பத்தில் பயமாக இருந்தது. அவர் ஒரு ஜாம்பவான் ஆனால் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை ஒரு மென்டராகவும், வழிகாட்டியாகவும் இருந்து ஒவ்வொரு காட்சியையும் விரிவாக விளக்கி மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார். இந்தப் படத்தின் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்ததற்கு அவருடைய பங்களிப்புதான் முக்கிய காரணம். படத்தின் முதல் கியூப் திரையிடலை பார்த்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். இயக்குநரை கட்டிப்பிடித்து ‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என்று சொன்னேன். ஜிப்ரான் சாரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. பத்திரிகையாளர்கள் படத்தை பாஸிடிவாக எழுதி மக்களிடம் கொண்டு சென்றது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது. படத்தில் நடித்த நடிகர்கள், கலரிஸ்ட், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் முதல் அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.” எடிட்டர் தினேஷ்குமார் பேசியதாவது.., “முதலில் அங்கீகாரம் படத்திற்கு ஆதரவு அளித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் தென்பாதியான் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய ஜிப்ரான், பீட்டர் ஹெய்ன், சம்பத் ஆழ்வார், ஏ.விஸ்வநாத் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் காட்சிகள் சினிமாத்தனத்தை மீறாமல் இயல்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் அமைந்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாகும். அனைவரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.” இயக்குநர் தென்பாதியான் பேசியதாவது…, “இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கதையை முதலில் கேஜிஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன். பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது கேஜிஆர், ‘இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் கொடுத்த விமர்சனங்களிலும் அது பிரதிபலித்திருக்கிறது. இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தார்கள். ஜிப்ரான் சார் அற்புதமான இசையைக் கொடுத்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, ‘இந்த ஹீரோவுக்கா?’ என்று முதலில் கேட்டார். ஆனால் கதையை முழுமையாகக் கேட்ட பிறகு மிகவும் பிடித்துப்போய், இந்தப் படத்தில் இணைந்தார். அவர் இணைந்த பிறகு, இந்தப் படம் இன்னும் பெரிய உயரத்தை அடைந்தது. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த வாரங்களிலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவு வேண்டும். நன்றி.” தயாரிப்பாளர் அருள் முருகன் பேசியதாவது.., ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படம் இது. எங்களுடைய ஹீரோ கே.ஜி. சார் வந்திருக்கிறார். எங்களை நம்பி, இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள் உழைத்திருக்கிறார். நான் தயாரிப்பாளராக இருப்பதற்கு முன்பு, அவரிடம் மேனேஜராகத்தான் என்னுடைய கேரியரைத் தொடங்கினேன். இன்று இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்கிறேன். அதற்கு ரொம்ப நன்றி சார். அடுத்து ஜே.பி. அண்ணா, அதாவது இந்தப் படத்தின் இயக்குநர். முதல் நாளிலிருந்தே இன்று வரை அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய எழுத்தையும், அவர் சொல்ல வந்த விஷயங்களையும் படமாக உருவாக்கியிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் அண்ணா என ஒளிப்பதிவாளர் அனைவரும் கடுமையான உழைப்பை தந்துள்ளனர். இப்படத்தை எப்படியாவது நீங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நன்றி. தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர் பேசியதவது.., முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் தென்பாதியான் (ஜே.பி.) அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் முக்கிய காரணமே அவர்தான். இந்தக் கதைக்காக நிறைய ஆய்வுகள் செய்தார். ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காக பல இடங்களுக்குப் பயணம் செய்து, மிகுந்த உழைப்பைச் செலவிட்டார். அதேபோல் தயாரிப்பாளரும் எங்கள் அண்ணனுமான கே ஜெ ஆர் இந்தப் படத்திற்காக முழு ஆதரவையும் அளித்தார். இந்த மாதிரியான படத்தை உருவாக்குவதற்கு நிறைய காலமும் உழைப்பும் தேவைப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். தொழில்நுட்பக் குழு முழு ஆதரவு தந்ததனர் “அங்கீகாரம்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இன்னும் இப்படத்திற்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. தயாரிப்பாளர் நடிகர் கே ஜெ ஆர் பேசியதாவது.., முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை மீடியம் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் உட்பட அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பையும், ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பையும், ஷெரீப் நடன அமைப்பையும் கவனித்துள்ளனர். இப்படம் மக்களின் பேராதரவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

hemalatha1 month ago1 month ago 0
  • Recent

Trending

Address - 69, 2nd floor, Sivanandha Nagar, 17th Street, Senthil Nagar, Kolathur, Chennai - 99
Email Id: ilanchoorian123@gmail.com Powered By BlazeThemes.