நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் வெளியான படம் “வலிமை”. இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தாலும். விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.
அஜித் குமார் 61 (AK 61) :
வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித், ஹச் வினோத், போனி கபூர் கூட்டணி இணைகிறது. AK 61 படப்பிடிப்பு மார்ச் 9ம் தேதி துவங்கவிருந்த நிலையில். படத்திற்கான செட் வேலைகள் முடியாத காரணத்தால் தள்ளி போகிறது.
இந்த படத்திற்காக சென்னை மவுண்ட் ரோட்டை ஹைதராபாதில் செட்டாக அமைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் AK 61 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 11ம் தேதி துவங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அஜித் குமார் 62 (AK 62) :
லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் AK 62 படம் உருவாகிறது என சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ஏற்கனவே அனிருத் இசையில் விவேகம், வேதாளம் படங்களில் அஜித்துக்கான மாஸ் மிக வரவேற்பை பெட்ரா நிலையில். மூன்றாவது முறையாக அனிருத் இசையமைக்க போகும் AK 62 படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகம்.
AK 62 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
அஜித் குமார் 63 (AK 63) :
அஜித் குமாரின் விஸ்வாசம் படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்தது. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டீவி நிறுவனம் பெற்றது.
அதன் பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த படம் சிறிது சொதப்பல் தான்.
தற்சமயம், அஜித் நடிக்கும் AK 63 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிறது.
அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு மேல் AK 63 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
அதிகார பூர்வ தகவல்கள் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
எதற்க்காக சிறுத்தை சிவா ?
வலிமை, AK 61, AK 62 என மூன்று படங்களும் ஆக்ஷன் மற்றும் மாஸான பில்டப் கதைகளாக இருப்பதால், கமேற்சியல் கதையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அஜித் குமார் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
கூடுதல் தகவல்கள் என்னென்ன ?
நடிகரும் பாடலாசிரியருமான சிவ கார்த்திகேயனுக்கு ரூ.85 கோடி கடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் 5 படங்களுக்கு ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் பணத்தை பெற்று கடன் அடைத்ததாக கூறப்படுகிறது.
தற்போது, நடிகர்/ தயாரிப்பாளர் விஷால் ரூ.100 கோடிக்கு மேல் கடன் வைத்துள்ளார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருடன் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் விஷால் அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை என்றும் தெரிகிறது.
அதே கடன் சுமை காரணமாக தான் நடிகர் அஜித் குமார் பெரிய தயாரிப்பு நிறுவனங்களான லைகா, ஜீ ஸ்டுடியோஸ், ஏ.ஜி.எஸ்., சன் பிக்சர்ஸ் என பல நிறுவனங்களுக்கு படம் நடிக்கவுள்ளதாகவும். இப்போதே கால் ஷீட் கொடுத்துவிட்டு அட்வான்ஸ் பணத்தை வாங்கி தன் சொந்த பிரச்சனைகளை முடித்துக் கொள்கிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது.
AK 62 படத்தை முடித்துவிட்டு மீண்டும் லைகா நிறுவனத்துடன் அஜித் இணைவார் என கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.