‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

ஆகாஷ் முரளி, “இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நயன்தாரா மேம்க்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் பிரிட்டோ சார், சினேகாவுக்கு நன்றி. என்னுடைய கோ-ஸ்டார் அதிதிக்கு நன்றி. நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. அவர்தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணு வர்தன் சார், அனு வர்தன் மேம், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எல்லோருக்கும் நன்றி”.

நடிகர் ஆர்யா, “எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. கொடுத்த காசில் ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார் விஷ்ணு. அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி ’நேசிப்பாயா’ படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார்.

நடிகை அதிதி, “முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி”.

அதர்வா முரளி, “என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. என்னுடைய முதல் படமான ‘பாணா காத்தாடி’யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோலதான், ஆகாஷூக்கும். நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம். அப்போ ஆகாஷ் சின்ன பையன். பாத்துக்கலாம் அண்ணா என எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *