பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் படம் “லவ் டுடே”. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். AGS எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படம் திரையில் வெற்றிகரமாக, ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரதீப்பை தேடி வந்த சோதனை;
சமீபத்தில் பிரதீப் அளித்திருந்த பேட்டியொன்றில், நான் யுவன் ஷங்கர் ராஜாவின் “பேன் பாய்”. யுவனின் இசையில் ஏதோ ஒன்று உள்ளது என்றிருப்பார். ஆனால், 2010ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் தனது முகநூல் பக்கத்தில், யுவனை விமர்சிக்கும் வகையில் சில பதிவுகள் செய்திருப்பார்.
இதனை கண்டுபிடித்த நெட்டிசன்கள், பிரதீப்பை டேக் செய்து கலாய்த்து வந்தனர். இதனால், தனது முகநூல் பக்கத்தை முழுமையாக டெலீட் செய்துவிட்டார் பிரதீப். ஆனால், நெட்டிசன்கள் எடுத்த ஸ்க்ரீன் ஷாட் இன்னும் சமூக வலைதள பக்கத்தில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.