கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ் கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ், சூரி, ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.சுந்தர் மற்றும் பலரின் நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான படம் “விருமன்”. 2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் இப்படத்தை, சக்தி பிலிம் பாக்ட்ரி B.சக்திவேல் ரிலீஸ் செய்கிறார்.
கதைப்படி..,
சிறுவதில் தந்தை (பிரகாஷ் ராஜ்) கொடுமை தாங்கமுடியாமல் விருமன்(கார்த்தி) கண் முன்னே தீயிலேறிடந்த்து இறக்கிறார் தாய் (சரண்யா). தாயின் சாவுக்கு காரணமான தந்தையை பழி வாங்க நினைக்கிறார் விருமன். ஆனால், தன மாமா(ராஜ் கிரண்) பேச்சை கேட்டு வெளியூர் சென்று பல வருடங்கள் கழித்து ஊருக்கு திரும்புகிறார் விருமன். ஆனால், இப்போது தந்தைக்கு உறவின் முக்கியத்துவத்தையும், அன்பையும் உணர்த்துவதற்காகவும், தந்து அண்ணன்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தாய் சொன்ன சொல்லையும் மனதில் வைத்துக் கொண்டு. அதற்காக மெனக்கெடுகிறார் விருமன். தந்தைக்கு உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தினாரா? தாய்க்கு தந்த வாக்குறுதியை காப்பாற்றினாரா? என்பது மீதிக்கதை..,
கார்த்திக்கு கிராமத்து கதை என்றால் பிய்த்து உதறிவிடுவார். இப்படத்திலும் அதே தான். இம்முறை வழக்கத்தை விட சிறப்பான நடிப்பை நடித்துள்ளார் கார்த்தி.
அறிமுக நாயகி அதிதி, வந்த காட்சி அனைத்திலும் ஸ்கோர் செய்துவிட்டார். நடிப்பு, நடனம், பாடல் என அனைத்தும் கனகச்சிதம்.
உடன் நடித்த, அத்தனை மூத்த கலைஞர்களும் அனுபவமான எதார்த்த நடிப்பையே நடித்துள்ளனர்.
இயக்குனர் முத்தையா வழக்கம் போல் சென்டிமென்டிலும், கதையிலும் தெளிவாக இருந்து சாதித்துவிட்டார். ஆனால், இவ்வளவு நீளமான படம் தேவையா? என்று கேள்வி மட்டும் தான்.
செல்வாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், காட்சியும் உணர்வையும் சேர்த்து பேசியது. வழக்கமான யுவனின் இசை இது இல்லை. யுவனின் பின்னணி பட்டையை கிளப்ப வேண்டிய இடத்திலெல்லாம் நம்மை ஏமாற்றத்திற்கு தள்ளும்.
விருமன் – அப்பனுக்கு பாடம் சொன்னவன்.