விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்துவருகிறது. சமீபத்தில் நடந்த விக்ரம் திரைப்படத்தின் வெற்றிவிழாவில் விநியோகிஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இந்த ஆண்டின் முதல் லாபகரமான படம் விக்ரம் தான் என்று தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் விநியோகம் செய்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக 2 வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் மூலம் எங்களுக்கு இதுவரை 75 கோடி ரூபாய் பங்கு கிடைத்துள்ளது என்றார்.

டிஸ்னிப் ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது விக்ரம்

ஓடிடி தளத்தின் ரீலிஸ் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திரையரங்கில் வெளியான 28 நாட்களுக்கு பின்னர் ஓடிடியில் படம் ரீலிஸ் செய்யப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. திரையரங்கில் படம் இதுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ஒருவாரம் கழித்து வருகிற ஜூலை 8ஆம் தேதி ஹாட் ஸ்டாரில் விக்ரம் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *