‘தளபதி68’-ஐ இயக்கப் போவது ஆர்.ஜே.பாலாஜி?

நடிகர் விஜயின் 66வது படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இன்று காலை முதல் அடுத்தடுத்து 2, 3ஆம் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகிபாபு, குஷ்பூ சுந்தர் இன்னும் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்குப் பிறகு பெயரிடப்படாத ‘தளபதி67’ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. அதிலும், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்றே கூறலாம்.

மேலும், நடிகர் விஜயின் பிறந்தநாளை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு இன்னொமொரு மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இதுபற்றி அவர் கூறுகையில்:

இன்று தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிவிட்டு, ஒரு கதை இருக்கிறது என்றேன். அவரும் ஆவலுடன் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். விரைவில், ‘தளபதி68’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.

மேலும், இப்படம் RRR மற்றும் KGF2 அளவிற்கு இருக்கும் என்றும் இயக்குனர் மற்றும் நடிகரான ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

ஆர்.ஜே.பாலாஜியும் தொடர் வெற்றிப் படங்களாக கொடுத்து வருவதால் தளபதிக்கு சிறந்த வெற்றிப் படத்தை கொடுப்பார் என்று நம்புவோம்.

லேடி சூப்பர் ஸ்டாரை வைத்த இயக்கிய படம் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *