வாரிசு திரைவிமர்சனம் – (3.5/5)

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருக்கும் படம் வாரிசு.

சரத்குமார் மிகப் பெரிய தொழிலதிபர். அவரை தொழிலில் தோற்கடிக்கும் போட்டியாளராக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் சரத்குமாரின் வெற்றி பெறுகிறார். சரத்குமாருக்கு மூன்று மகன்கள். மூன்றாவது மகன் தான் விஜய். குடும்பத்தையும் தொழிலாகவே பார்க்கும் சரத்குமார், தன் பேச்சை கேட்காத விஜய் வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். அவ்வப்போது அம்மாவிடம் மட்டும் பேசுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய விஜய் சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கிறார். அதற்கான யோசனையை கூறி முதலீட்டாளர்களை அழைக்கிறார்.

இந்நிலையில், திடீரென்று சரத்குமாருக்கு குடும்பத்திலும் தொழிலிலும் பிரச்சனை வருகிறது. அதற்கு காரணமாக பிரகாஷ்ராஜ் இருக்கிறார். தன்னுடைய அடுத்த வாரிசாக யார் என்பதில் முதல் இரண்டு மகன்களுக்கும் போட்டி உருவாகிறது. ஆனால், எதிர்பாராத திருப்புமுனையாக விஜயை வாரிசாக அறிவிக்கிறார் சரத்குமார். இதனால் முதல் இரண்டு மகன்களும் வீட்டை விட்டு வெளியேருக்கிறார்கள். பிரகாஷ் ராஜும் அதிர்ச்சியடைந்து சரத்குமாரை அழிக்க நினைக்கிறார்கள்.

விஜயின் அண்ணன்கள் அப்பாவையும் விஜயையும் புரிந்து கொள்கிறார்களா? அல்லது எதிராக திரும்புகிறார்களா? பிரகாஷ் ராஜ் சரத்குமாரை தோற்காடிக்கிறாரா? அல்லது பிரிந்து போன அண்ணன்களை குடும்பத்துடன் ஒன்றாக இணைக்கிறாரா விஜய்? என்பதே படத்தின் மீதி கதை.

விஜய் கியூட்டாக சுறுசுறுப்பாக துடிப்புடன் இருக்கிறார். நடனத்தில் பின்னி பெடலெடுக்கிறார். வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளி தெளிக்கிறது. ராஷ்மிகா காதலுக்கும், பாடல்களுக்கும் வந்து போகிறார். பாடல்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், சுதா, ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட் அனைவரும் அவரவர் பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

அமைதியாக ஸ்கோர் செய்கிறார் யோகிபாபு.

பின்னணி இசையில் பின்னிஇருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.

தெலுங்கு ரசிகர்களுக்காக பல காட்சிகளை இழுத்திருக்கிறார் வம்சி. இருப்பினும், விஜயின் அனைத்து கோணங்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து பல்ஸை கச்சிதமாக பிடித்து ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார்.

வாரிசு – குடும்பங்களுக்கு பொங்கல் விருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *