கிரேஸ் ஜெயந்தி ராணி, jp அமலன், jp அலெக்ஸ் இனைந்து தயாரித்து, வெற்றி, அணு சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், ரவி வெங்கட் ராமன், வேலா ராமமூர்த்தி நடிப்பில், ஸ்ரீ கந்தன் இயக்கத்தில், ரான் இதன் யோஹன் இசையில் உருவான படம் ‘வனம்’.
வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கலை கல்லூரியின் ஆண்கள் விடுதியில் ஒரு அறையில் மட்டும் மர்மமாக அடுத்தடுத்து தற்கொலைகள் நிகழும். அந்த அறையில் தங்கியிருக்கும் கதாநாயகன் மகிழ்(வெற்றி), யூடுப் சேனல் வைத்து பல ஆராய்ச்சிகள் செய்யும் தனது சிறு வயது தோழி ஜாஸ்மின்(ஸ்ம்ருதி வெங்கட்) உடன் இனைந்து அந்த மர்மங்களுக்கான காரணத்தை தேடி செல்கின்றனர்.
ஒரு எழுத்தாளர் எழுதிய ஜமீன்(வேலா ராமமூர்த்தி)யின் சுய சரிதையை புத்தகம் கிடைக்கும், அதில் இருப்பது பாதி கதை மட்டுமே, இவர்கள் பிறகு என்ன செய்தார்கள்,அடுத்து நடக்கப்போகும் தற்கொலைகள் தடுக்கப்பட்டதா? அந்த அறையில் இருக்கும் மகிழ் என்ன ஆனார்? என்பது மீதி கதை…
படத்தில் எதிர் பார்க்காத திருப்பங்கள் இருக்கும், அது அனைத்தும் கதைக்கு தேவையானதே, ஆரம்பம் முதல் இடைவேளை வரை பரபரப்பான திரைக்கதையே, ஆனால் இரண்டாம் பாதியில் அதுதொடரவில்லை.
பல படங்களை தன் காட்சியின் மூலம் நினைவு படுத்தும் இந்த படம், சமீபத்தில் வெளியான பூமிகா, உடன்பிறப்பே படத்தையும் நினைவுக்குள் கொண்டுவரும்.
படத்திற்கு பலம் இவை இரண்டும் ஒன்று ஒளி, மற்றொன்று ஒலி.
ரான் இதன் யோஹனின் இசை தேவைப்பட்ட இடங்களில் மிரட்டலாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.
விக்ரம் மோகனின் ஒளிப்பதிவு அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
நடிப்பில் அனைவரும் அற்புதம்.
மப்பு ஜோதி பிரகாஷ் படத்தொகுப்பில் கலக்கியுள்ளார்.
என்னதான் தகுதியான படக்குழுவினர் இருந்தாலும் திரைக்கதையில் மற்றும் கதையில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.
வனம் – இயற்கையின் எதார்த்தம்