நடிகர் உதய் மஹேந்திரன்,
இது என் முதல் மேடை முதலாவதாக முந்திரி கண் என ஒரு படத்திற்கு நான் கம்மிட் ஆனேன் ஆனால் அது நடப்பதற்கு காலமானது. அதன் பின் இந்த படம் வாய்தாவிற்கு கமிட் ஆனேன். வாய்தா போன்று இந்த படம் தள்ளி தள்ளி இப்பொது வெளியாக தயாராகியிருக்கிறது. நான் அடுத்த மேடையில் நிறைய பேசுவதற்கு முயற்சி செய்கிறேன் என்றார்.
நடிகை பௌலி பேசியபோது,
இது என்னுடைய முதல் மேடை, எனக்கு பேச சிறிது தயக்கமாகவுள்ளது. எனக்கு இது 10 வருட கனவு. இப்போது நினைவாகியது மகிழ்ச்சி. நிறைய சிரமங்களை தாண்டி தான் எனக்கு இந்த பாதை அமைந்துள்ளது. சி வி குமார் சார் அவர்களுக்கு நன்றி. என்றார்.
இசையமைப்பாளர் சி லோகேஸ்வரன்,
அனைவரை போன்று எனக்கும் இது முதல் மேடைதான். என் முதல் படம் இது. எனக்கு வாய்பளித்தமைக்கு மிகவும் நன்றி. பாடலாசிரியர்களை பார்த்து தான் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். மக்கள் அனைவரும் இந்த படத்தின் பாடல்களை விரும்புவார்கள் என நம்புகிறேன். என்றார்.
தயாரிப்பாளர் கே வினோத்,
வராஹா ஸ்வாமி பிலிம்ஸின் முதல் படம் இது, அனைவரும் இந்த படத்திற்கு கைகொடுக்க வேண்டும். இந்த படம் வெற்றியடையும் என உறுதியாக உள்ளேன், என்றார்.
பாடலாசிரியர் உமாதேவி,
2018 – 2019 காலகட்டத்தில் வாய்தா படத்தின் பாடல்களை எழுதுவதற்கு இயக்குனர் அழைத்தார், இந்த படத்தின் வெளியீடு வாய்தா போன்று தள்ளி சென்று தற்போது அதற்கு சரியான நீதி கிடைக்கவுள்ளது. மிகவும் மகிழ்ச்சியான தருணம். ‘ரத்தத்தில் பேதமில்லை, முத்தத்தில் ஜாதியில்லை’ என்ற வரி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அகமாக இருந்தாலும் புறமாக இருந்தாலும் அதற்கு சரியான அறம் தேவை என்று தான் நான் இது வரை மாணவர்களுக்கும் பாடம் எடுத்து வருகிறேன். அது போன்ற படம் தான் இதுவும். தமிழ் சங்க இலக்கியங்களில் 18 கீழ் கணக்கு நூல்களிலும் அறத்தை தான் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைக்கு தமிழ் முதலில் சொல்லிக்கொடுக்கும் சொல்லலே ‘அறம் செய்ய விரும்பு’ என்பது தான்.
அதனால் அறம் என்பது எல்லாக்காலத்திலும் தேவையான ஒன்று. தற்போதைய காலத்தில் அது மிகவும் தேவையாக இருக்கிறது. இந்த படத்தில் அது ஆழமாக இருக்கும். என்றார்
ஒளிப்பதிவாளர் ஆர் ஜே சேது முருகவேல்,
என் அம்மாவிற்கு முதல் நன்றி, அப்பாவிற்கு நன்றி, என்னுடைய குரு விஜய் மில்டன் சார் அவர்களுக்கு நன்றி, எனது கஷ்ட காலத்தில் துணையாக இருந்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் மஹி அவர்களுக்கு நன்றி, என்றார்.
நடிகர் மு ராமசாமி,
நாம் அனைவரும் கொண்டாட கூடிய முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 அன்றைக்கு தான் இந்த படத்தை பார்த்தேன். ஆனால் இந்த படம் என்னை முட்டாளாக்கவில்லை. இந்த படத்தை பார்த்த பிறகு என் கதாபாத்திரம் இந்த படத்தில் நடித்திருக்க கூடிய சிறுவனுக்கு செய்த செயலை கண்டு என் மனம் கனத்து போனது. என்னால் இன்னமும் அதை விட்டு வெளியில் வர முடியவில்லை. நல்ல படம் மனதை கனக்க செய்யும் அப்படி பட்ட படம்.
இந்த படத்திற்கு ‘ஏகாலி’ என்று தான் பெயரிடப் பட்டது. ஆனால் அந்த பெயர் வர்ணத்தை மட்டுமே பேசும் படியாக இருந்திருக்கும் ஆனால் இது வர்ணத்தை அறத்தை என இரண்டையும் பேச கூடிய படம்.
இந்த படம் மக்கள் மனதில் ஒரு கேள்வியை எழுப்புமேயானால். அது தான் இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கும்.
ஒரு சிறிய சமூகத்தை இவர் எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. அந்த சமூகத்தின் வலியை உணர்த்தும் படம் இது. பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கை அனைத்திலும் பங்களிப்பவர் வண்ணார் சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.
முன்னதாக இந்து வண்ணார் என தான் சாதி சான்றிதழில் பதிவு செய்தனர், தற்போது கணினிமயமாக்கி விட்டோம் என்று காரணம் காட்டி ‘வண்ணார் (சலவை தொழிலாளி)’ என தொழிலை ஜாதியாகி விட்டார்கள். இன்னும் சில காலங்கள் சென்றால் ‘நடிகர் தொழிலாளி’ என்று எங்களுக்கும் ஒரு ஜாதி முத்திரையை பாதிப்பார்களோ என்று கேள்வி எழுகிறது.
இது போன்ற படத்தை எடுத்ததார்க்கு மஹி வர்மனுக்கு மிகவும் நன்றி. தமிழ் சமுதாயத்திற்கு இது போன்ற இளைஞர்கள் தேவை இவரை பாரதி எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என்றார்.
இயக்குனர் மஹி வர்மன்,
இந்த படம் எடுத்து 3 ஆண்டுகள் ஆனது, ஆனால் வெளியாக தாமதமானதால் இதற்கு முன்னதாக இது போன்று சாதி படங்கள் மக்களின் வலியை பேசும் படங்கள் வந்ததால். வாய்தாவும் அப்படி பட்ட படங்கள் என்று தான் அடையாளங்கள் காட்டபடும். ஆனால் இதை துவங்கி மூன்று வருடங்கள் ஆகின.
என் கதை மக்களுக்கான கதை. எனது இந்த கதையை கேட்டுவிட்டு நான் சொன்ன பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு பட்ஜெட்டை கொடுத்தார் தயாரிப்பாளர்.
ஆனால் முதல் பிரச்சனை ஏகாலி என்ற டைட்டில் மூலம் தான் ஆரம்பித்தது. அதற்கான ‘NOC’ வாங்கியும் அந்த பெயரை எங்களால் உபயோகிக்க முடியவில்லை என்பது வருத்தம். இந்த படத்திற்கு சரியான நீதி இப்பொது கிடைக்கவுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி.
teaser : https://youtu.be/GU_PqYOobi4