துக்ளக் தர்பார் திரைவிமர்சனம் 3.5/5

விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், பகவதி பெருமாள், இவர்களுடன் சிறப்பு கதாபாத்திரத்தில் நம் அனைவரும் ரசித்த நாகராஜா சோழன் M.A.,M.L.A. ஆகா சத்யராஜ் நடித்து, பாலாஜி தரணீதரன் எழுத்தில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில், வழக்கம் மாறா இனிமையான இசையை அமைத்திருக்கும் கோவிந்த் வசந்தா உடன், மனோஜ் பரமாம்ஸா, மஹேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவில், செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான படம் துக்ளக் தர்பார்.

வழக்கத்திற்கு மாறான கதைக்களம், இயல்பு அரசியலையும், ஒரு உண்மை தொண்டனின் வளர்ச்சியையும், பறைசாற்றும் படம் இது. வழக்கம் போல் கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்துள்ளார் மக்கள் செல்வன். பெருமளவில் வசனம் இல்லையென்றாலும் தனது நடிப்பின் மூலம் அவரது கதாபாத்திரத்தின் வலியை நமக்கு உணரவைக்கிறார் மஞ்சிமா மோகன், சிறு காட்சியில் வந்தாலும் கட்சிதமாக நடித்திருக்கிறார் ராஷி கண்ணா. அசரவைக்கும் நடிப்புடன் பார்த்திபன், எதிர்பார்க்கும் நேரத்தில் காமெடியையும் உணர்ச்சியையும் கொடுத்திருக்கிறார் கருணாகரன், முக்கியமாக பேசவேண்டியவர்கள் இந்த படத்தின் லைட் மேன்கள். ஒரு சில முக்கியமான காட்சியை லைட்டிங்கின் மூலம் வெளிப்படுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை பணமும் பதவியும் மட்டுமே போதும் என்று நினைத்து கொண்டிருக்கும் கதாநாயகன் ஒரு சில இடையூறுகள் மூலம் தன்னுள் இருக்கும் ஒரு அன்பானவன் உண்மையானவனை உணர்ந்து எவ்வாறு தன்னை தானே மாற்றிக்கொள்கிறார் என்பது கதைக்களம். இது போன்று ஒரு கதையை காட்சியின் மூலம் பார்த்தால் மாட்டுமே உணர முடியும், எதிர்பார்த்த கிளைமாக்ஸ் இல்லை என்றாலும் அழகான காமெடியுடன் நிறைவு செய்கிறார் சத்யராஜ், நமக்கு நாமே வில்லன் நம்மை நாம் சமாளித்தால் போதும் வேறு எவரையும் சமாளித்து விடலாம் என்பது இந்த படத்தின் அழகான கருத்து.

துக்ளக் தர்பார் – அரியணையை அலங்கரித்துள்ளது

– நிதிஷ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *