வருகிற ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாட பட இருக்கிறது. டெல்லியில் வாகன அணிவகுப்பு நடக்கவிருக்கும் நிலையில் தமிழ்நாட்டு ஊர்தி புறக்கணிக்க பட்டுள்ளது. இந்த செயல் தமிழகத்தின் சுதந்திர போராட்டத்தை மறைக்கப்படும் வகையில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் புதிய கருப்பொருளுடன் குடியரசு தின நிகழ்ச்சி கொண்டாடபடும். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனது என்பது தான் இந்த ஆண்டின் கருப்பொருள். இந்த நிகழ்ச்சியில், முதலில் ராணுவ அணிவகுப்பு நடக்கும், அதை தொடர்ந்து மாநில அரசுகள் இந்த கருப்பொருளை மையமாக வைத்து மாநிலத்தின் ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறும்.
இந்த தேர்வை செய்வது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல் படும் மத்திய விழாக்கள் இயக்குனரகம் ஆகும்.அவர்கள் முழுமையாக 10 கூட்டங்கள் நடத்தி ஆலோசித்த பிறகே முடிவுகள் எடுப்பார்கள், அவர்கள் கூறும் கட்டுப்பாடுகளையும் திட்டங்களையும் அந்த நேரத்திலேயே சம்பந்தப்பட்ட மாநில குழு அவ்வப்போதே அந்த மாற்றங்களை செய்துவிடுவார்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனா இந்த ஆண்டு தமிழகம் சமர்ப்பித்த திட்டம் என்னவாயின். தமிழக வீரர்கள் ஆகிய வ.உ.சி, ம.போ.சி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் போன்றவர்களின் வீரத்தை போற்றும் விதமாக தமிழகத்தின் திட்டம் அமைந்திருந்தது.
அதில் முதல் 3 கூட்டத்தில் அனுமதி தரப்பட்டது, ஆனால் 4ம் கூட்டத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் திட்டத்திற்கு அனுமதி தரவேண்டும் எனவும், திட்டத்தை நிராகரிபது தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கிறது எனவும். நேரடியாக பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கடிதத்தை எழுதியிருந்தார்.
இந்த மறுப்பிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன, அதில் முதலாவதாக இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாற்றில் தமிழகத்தை முதன்மை படுத்தும் விதமாக தமிழகத்தின் சார்பில் சமர்ப்பிக்க பட்ட திட்டம் இருப்பதால் நிராகரிததாக சொல்லப்பட்டது.
முக்கியமாக ராணி வேலுநாச்சியார் அவர்கள் 1780-90ல் ஆட்சி செய்தவர், இவர் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக முதல் குரல் கொடுத்தார். இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் ‘ கிழக்கு இந்திய கம்பனிக்கு எதிரான முதல் குரல் தமிழகத்தில் இருந்து வந்தது’ என்பது தான்.
இரண்டாம் கரணம், வ.உ.சி, மருது சகோதரர்கள் போன்றவர்கள் பெரிதும் பிரபலமானவர்கள் இல்லை எனவும், குடியரசு தின விழாவில் பல உலக தலைவர்கள் கலந்து கொள்வதாகவும், அவர்களுக்கு பரிட்சியமான தலைவர்கள் இவர்கள் இல்லை எனவும் நிராகரிக்க பட்டதாக காரணங்களை தெரிவித்தனர்.
மற்றொரு பக்கம் மேற்கு வங்கத்திற்கும் அனுமதி மறுக்க பட்டுள்ளது,அவர்களின் கருப்பொருள் திட்டம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளை பறைசாற்றும் விதமாக திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர். ஹிட்லரை தொட்டு பேசும் அளவிற்கு தைரியமான ஒரு மாவீரர் மதிப்பிற்குரிய நேதாஜி ஆவர், இவ்வளவு பிரபலமான வீரரின் பிறந்தநாளை போற்றும் திட்டத்தையும் நிராகரித்துள்ளது மத்திய பாதுகாப்பு அமைச்சகம்.
இதில் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
தமிழகம்,கேரளா, மேற்கு வங்கம், போன்ற 3 மாநிலத்திற்கும் அனுமதியை மறுத்திருந்தது மத்திய பாதுகாப்பு அமைச்சகம். ஆனால் தென் இந்தியாவில் கர்நாடகாவிற்கு மட்டும் அனுமதி வழங்கியதை தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
75 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கிழக்கு இந்திய கொம்பனியை எதிர்த்து முதல் குரல் தமிழகத்தில் இருந்து தான் வந்தது. அதை போற்றுவது மத்திய அரசிற்கு என்ன சிரமம்? தமிழகத்தின் வரலாற்றை மறைக்க தான் இந்த முடிவா? கப்பலோட்டிய தமிழனின் வீரமும் வரலாறும் புதைக்கப்படுகின்றதா?
இவர்களையெல்லாம் தாண்டி மகாத்மா காந்தி எந்த அளவிற்கு உலகம் முழுக்க பிரபலமோ அதே அளவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் பிரபலம். அவரின் 125வது பிறந்தநாளை என் ஏற்கவில்லை?
கேரளத்திற்கு மறுப்பு தெரிவித்தது ஏன்? மத்திய அரசின் ஆளுமையை காட்டுகிறதா இந்த செயல்? அல்லது தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தின் முதல்வர்களை கட்டுப்படுத்த முடியாமல், அவர்களின் சரமாரி குற்றச்சாட்டுகளுக்கு பதில் இல்லாமல் பழிவாங்குகிறதா பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பா.ஜ.க அரசு?
பொது மக்களுக்கு இடையில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதை சம்பந்த பட்ட மாநில அரசுகள் எப்படி எதிர்கொள்ள போகிறது?