புக்கிங்கில் தெறிக்கவிடும் “தி லெஜெண்ட்”

தி லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்திருக்கும் படம் “தி லெஜெண்ட்”. JD – ஜெரி இயக்கிய இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த நிலையில். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தின் புக்கிங்:

இப்படத்தின் ட்ரைலர், கிலிம்ப்ஸ், ஆக்ஷன் ப்ளாக் வீடியோ என அனைத்தும் லட்சக்கணக்கான வியூஸ் அள்ளிய நிலையில்.

நாளை (28 ஜூலை) வெளியாகவுள்ள நிலையில். மாஸ் ஹீரோக்களுக்கு மட்டுமே 4 மணி காட்சிகள் திரையிடப்படும் என்ற போக்கை தனது முதல் படத்திலே லெஜெண்ட் சரவணன் அவர்கள் உடைத்து சாதனை படைத்துள்ளார்.

ஆம், உலகமெங்கும் கிட்ட தட்ட 2500க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இப்படத்திற்கு. தமிழகத்தில் பல இடங்களில் 4 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 4 மணி காட்சிகளுக்கான முன் பதிவு களைகட்டுகிறது. மாஸ் ஹீரோக்கு கிடைக்கும் அத்தனை வரவேற்பும் பிரமாண்டமும் “தி லெஜெண்ட்” திரைப்படத்திற்கு கிடைத்தது மட்டுமல்லாமல் 5 மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *