சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படம் இன்று (09.04.2020) வெளியாக இருந்தது.
மேலும், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பார்த்து விஜய் மற்றும் விஜய் சேதுபதியை ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்தது. இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரோம் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார்.
கார்த்தியை வைத்து ‘கைதி’யை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும், உற்சாகமும் இன்னும் அதிகமாயிற்று.
ஆனால், கொரோனா பாதிப்பால் இன்று வெளியாகவில்லை. இதனால், விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தோடு இருந்தார்கள்.
அவர்களுக்காக இன்று ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பு தரப்பில் கூடிய விரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை கூறுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதன் மூலம், ஜூன் மாத இறுதியில் இப்படம் வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறார்கள்.