சமுத்திரக்கனி, வசுந்தரா, கதிர் மற்றும் சிலர் நடித்துள்ள படம் தலைக்கூத்தல். இல்லத்தை “y நாட்” ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயப்ரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
கதைப்படி,
கட்டிடம் கட்டும் வேலையில் இருக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து அசைவின்றி படுத்த படுக்கையாகி விட்ட அப்பா கலைச்செல்வனை மகன் சமுத்திரக்கனி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்.
அவரது இயற்கை உபாதைகளை அள்ளி எடுத்து போடவும், படுக்கையை சரி பண்ணவும் அவரை பராமரித்துக் கொள்ளவுமே சமுத்திரக்கனிக்கு நேரம் போய்விட, வருமானம் தரக்கூடிய தன் கட்டுமானப் பணியை விட்டுவிட்டு இரவு நேர வாட்ச்மேன் வேலைக்குச் செல்கிறார். காரணம் பகலில் மனைவி வேலைக்கு சென்ற பின் அப்பாவை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே.
மனைவி வசுந்தரா தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு போக அவர்களுக்குச் சொந்தமான பழைய வீட்டில் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் பொது நிகழ்வாகவே இந்தத் தலைக் கூத்தல் பல குடும்பங்களில் நிறைவேறி விட சமுத்திரகனியையும் அதற்கு வற்புறுத்துகிறது, குடும்பமும் அந்த சமூகமும்.
ஆனால் இயற்கையாக வந்த உயிர் இயற்கையாகவேதான் பிரிய வேண்டும் என்ற பிடிவாதத்தில் எவர் சொல்லியும் கேட்காமல் கடனாளியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுத்திரகனியின் என்ன செய்தார்? கடனில் இருந்து மீண்டாரா? அப்பாவை மீட்டெடுத்தாரா? என்பது மீதிக்கதை.
சமுத்ரகனியின் தந்தையாக நடித்துள்ள கலைச்செல்வன் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு காதிபத்திரத்தில் நடித்துள்ளார். படுத்துக் கொண்டிருப்பது ஒரு நடிப்பா? என்று கேட்க தோன்றினாலும். சில சமயங்களில் அவரின் அசைவினால் கண்கலங்கச் செய்துவிட்டார். தத்ரூபமான நடிப்பு.
சமுத்திரக்கனி மிடுக்கான தோற்றத்துடனும், துக்கக் காட்சிகளில் வழக்கம் போல் மூக்கை தூக்கிக் கொண்டும் நடந்து வருகிறார். அவ்வப்போது சோகமாக இருக்கிறாரா? கோபமாக இருக்கிறாரா என்றே தெரியாமல் போனது.
படத்திற்க்கு பலம் வசுந்தராவின் நடிப்பு தான். கோவக்காட்சி, சோகம், வெறுப்பு, சந்தோஷம், பயம் என அனைத்தையும் திறமையாக கையாண்டுவிட்டார்.
சமுத்ரகனியின் இளம் வயது தந்தையாக வருகிறார் கதிர். படுகையிலிருக்கும் கலைச்செல்வன் அவரின் முன்னாள் காதலை பற்றி நினைக்கும் காட்சி அவ்வப்போது வந்து செல்லும். கதிருக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும்.
கருப்பு துறை, பாரம் போன்ற படங்களைக் தலைக்கூத்தல் மையமாக இருக்கிறது. ஆனால், அந்த இரண்டு படங்கள் ஏற்படுத்திய தாக்கம் இப்படத்தில் இல்லை.
ஆனால், காதல் கதையில் அழகாக சாதி வன்மத்தை உணர்த்தி சென்றது. டைரக்டர் டச். திரைக்கதையில் கூடுதல் கவனம் தேவை ஜெயப்ரகாஷ்.
இசை சுமார் ராகம்.
தலைக்கூத்தல் – பாசப்போராட்டம்