சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் “சிட்டாடலில்” நடிக்கிறார்

ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO குளோபல் ஈவண்ட் தொடரான சிட்டாடல் யுனிவர்சின் இந்திய இன்ஸ்டால்மெண்டில் (installment) தலை சிறந்த நடிகையான சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) வருண் தவானுடன்(Varun Dhawan) இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ இன்று உறுதிசெய்திருக்கிறது. இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, புகழ்பெற்ற படைப்பாளிகளான இரட்டையர்கள் ராஜ் & DK. (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) தலைமையில் உருவாகி வருகிறது. அவர்கள்தான் இந்தத் தொடரின் முதன்மைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள். இந்த உள்ளூர் அளவிலான தொடருக்கான கதையை ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர்.மேனன் (Sita R. Menon) எழுதியுள்ளார். இதன் தயாரிப்பு வேலைகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருவதையும் இதன் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குநர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, படப்பிடிப்புக் குழுவினர் வட இந்தியாவிற்கும், பின்னர் செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சர்வதேச படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்வார்கள்.

முன்னர் அறிவித்தபடி, ரிச்சர்ட் மேடன் (Richard Madden) (பாடிகார்ட்) மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் (Priyanka Chopra Jonas) (குவாண்டிகோ) ஆகியோர் இந்தத் தொடரின் முதல்-வெளியீட்டில் சிட்டாடல் யுனிவர்ஸில் நடிப்பார்கள், அது ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இலிருந்து டேவிட் வேயீல் (David Weil) l (ஹண்ட்டர்ஸ்) உடன் வருகிறது மற்றும் 2023 இல் வெளியிடப்படவுள்ளது . மேடன் மற்றும் முதலில் வெளியிடப்படவிருக்கும் சோப்ரா ஜோனாஸுடனான சிட்டாடல் தொடரில் ஸ்டாண்ட்லி டுகி (stanley Tucci) (தி ஹங்கர் கேம்ஸ் சாகா) யும் இடம்பெறும். மாடில்டா டி எஞ்சலீஸ் (Matilda De Angelis) (தி அன்டூயிங்) நடித்த இத்தாலியன் ஒரிஜினல் தொடர் உட்பட, மேலும் அதிக உள்ளூர் மொழிகளிலும் சிட்டாடல் தயாரிப்புக்கள் உருவாகிவருகின்றன.

“மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தனது ஸ்ட்ரீமிங் அறிமுகத்தை ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் இரண்டுடன் பிரைம் வீடியோவில் தொடங்கிய அவர், இன்று திரைத்துறையில் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்களில் ஒருவராகவும் விளங்கி வருகிறார். இந்தத் தொடரில் வருண் மற்றும் எங்களோடு அணிவகுத்துள்ள வியக்கத்தக்க திறமை வாய்ந்த நடிகர்களின் குழுவோடு இணைந்து ஒரு முற்றிலும் புதிய அவதாரத்தில் அவரைத் திரையில் பார்வையாளர்கள் காண்பார்கள். ”என்று ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

“தி ஃபேமிலி மேன் படத்திற்குப் பிறகு மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே , எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் ஒரு மிகப்பொருத்தமான தேர்வாக இருந்தார். அவரை எங்களோடு இணைத்துக்கொண்டதில் எங்களை விட வேறு யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க முடியாது..”என்று படைப்பாளி இரட்டையர்களான ராஜ் & டி.கே. கூறினார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *