TAKE IT EASY
(தமிழ் படம் )
எழுதி இயக்கியுள்ளவர் -Sunil Prem Vyas
தயாரிப்பு- Dharmesh Pandit
வெளியீடு – Hansa Pictures
இன்றைய சூழ்நிலையில், நவீன நகரங்களில், தங்களது குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்த்திட முற்படும் பெற்றோர் , தங்களது குழந்தைகளின் சார்பாக , அவர்களுக்கான எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பை தாமே ஏற்றுக்கொண்டு , தங்கள் திட்டமிட்டபடிதான் தங்களது குழந்தைகள் தத்தம் எதிர்காலத்தை வகுத்துக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்!
தங்களது குழந்தைகளுக்கும், அவர்களது படிப்பு பற்றியும், எதிர்காலம் பற்றியும் , அவர்களே சுயமாக சிந்தித்து முடிவெடுக்க எண்ணம் , குழந்தைகளுக்கும் இருக்கும் என்பதை முழுவதுமாக மறந்து விடுகிறார்கள்!
தங்களது குழந்தைகளையும் அவர்களாகவே சிந்தித்து , முடிவெடுக்க மற்றும் செயல்பட , பெற்றோர்கள், உறுதுணையாக நிற்கவேண்டும் ஒழிய , தங்களது திட்டங்களை அமுலாக்க, தங்களது குழந்தைகளை பயன்படுத்த முற்படுவது சரியான செயலன்று என்கிற கருத்தை வலியுறுத்துகின்ற ஓர் திரைப்படமிது!
இரு சிறுவர்களின் சின்னச்சிறு உலகத்தினை சுற்றி படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது!
இப்படம், பெற்றோருக்கொரு பாடம் எனலாம்!