சுழல்- தி வோர்டெக்ஸ் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது, இந்த சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் படி உருவாகியுள்ளது. இந்தத் தொடர் பரபர திருப்பங்களுடன் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களுடன் பார்வையாளர்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் வெல்லும் படி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சுழல்- தி வோர்டெக்ஸ் இணைய தொடரில் நடித்த நடிகர்கள் தொடரின் அனுபவம் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். பாகுபலி மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் எல்லைகளை கடந்து வெற்றியை குவித்தது போல் சுழல் – தி வோர்டெக்ஸ் ஒரு வரலாறு படைக்கும்.
இத்தொடர் குறித்து கூறிய நடிகை பற்றி ஷ்ரேயா ரெட்டி…,
“காயத்திரி மற்றும் புஷ்கரின் பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன், மதிக்கிறேன், அவர்கள் என்னை அணுகியபோது நிச்சயமாக அந்த வாய்ப்பை தவற விடக்கூடாதென தோன்றியது . அவர்களின் விக்ரம் வேதா படத்தின் உருவாக்கமும் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுழல் அதே போன்ற பரப்பரப்பான கதையம்சத்தை கொண்டிருப்பதை என்னால் உணர செய்ய முடிகிறது. சுழல் பல வழிகளில் சரித்திரம் படைக்கப் போகிறது.
ஓடிடி இல் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்தகைய வெளியீட்டை பெற்ற முதல் தமிழ் ஒரிஜினல் தொடர் இதுவாகும்! நாட்டில் யாரும் பார்க்காத, கேள்விப்படாத எல்லைகளை இந்த தொடர் கடந்து போகிறது. கதையின் உள்ளடக்கம் மிகவும் பரப்பரப்பாகவும் அனைவரும் எளிதில் தொடர்புபடுத்தக்கூடியதாகவும் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இதனை கண்டிப்பாக ரசிப்பார்கள்,
‘இதுபோன்ற ஒன்றை கண்டு பிரமிப்பார்கள். அமேசான் பிரைம் வீடியோ தளத்தின் திறனைக் கண்டு, நான் ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.
இத்தனை பெரிய வெளியீடாக இதனை வெளியிடுவது மகிழ்ச்சி. மேலும், “பாகுபலி, ஜெய் பீம் போன்ற படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் – எல்லைகளை கடந்து அனைவருக்கும் நெருக்கமாகும் அழகான படைப்புகள் . சுழல் தொடரும் அதே போன்ற வெற்றியை பெறும். பாகுபலி பலமான படைப்பாக இருந்தது. அது இதுவரை யாரும் பார்த்திராத உலகம். ஜெய் பீமில் வலுவான உள்ளடக்கம் இருந்தது. அமேசான் பிரைம் வீடியோ சுழலை விளம்பரப்படுத்தும் விதம், அதை எடுத்து ஒரு அற்புதமான கேன்வாஸில் வைப்பது… போல் இருக்கிறது. எல்லோரும் அதைப் பார்க்க விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். சுழல்- சுழல் புவியியல் மற்றும் மொழியியல் எல்லைகளைத் தாண்டும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
மேலும் நடிகை, ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற பார்வையாளர்களை மயக்கிய படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்தப் படங்களைப் பார்த்து நான் திரையோடு ஒட்டிக்கொண்டேன், ஆனால் அதே போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பில், இவ்வளவு பெரிய குழு மற்றும் இவ்வளவு பெரிய அமைப்பில் ஒரு பகுதியாக இருக்கும்போது, அது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. சுழல் – தி வோர்டெக்ஸ் வெளியாவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
புஷ்கர் மற்றும் காயத்திரி ஆகியோரால் எழுதப்பட்டு உருவாக்கப்பட்ட சுழல் – தி வோர்டெக்ஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் இந்த வெப் சீரிஸ் 30+ இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியிடப்படுகிறது.