பாலிவுட் நடிகர் அபிசேக் பச்சன் வழங்கும் ப்ரைம் வீடியோவின் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’

அபுதாபியில் நடைபெற்று வரும் ஐ ஐ எஃப் ஏ விழாவில் அமேசான் ப்ரைம் வீடியோவின் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் தமிழ் க்ரைம் தொடரின் ஸ்னீக் பிக்கை பாலிவுட்டின் முன்னணி நடிகர் அபிசேக் பச்சன் வழங்கினார்.

இந்த விழாவில் முதன்முறையாக ‘சுழல்= தி வோர்டெக்ஸ்‘ எனும் தமிழ் க்ரைம் தொடர் முக்கிய இடத்தைப் பிடித்தது. இவ்விழாவிற்கு வருகைத் தந்திருந்த அனைவரையும் இந்த தொடர் மற்றும், இதில் நடித்திருக்கும் நடிகர்கள், தங்களின் துடிப்பான நடிப்பால் கவனத்தை ஈர்த்தனர். இதன் மூலம் இந்த தொடரைப் பற்றிய உலகளாவிய கவனத்தையும் தூண்டியிருக்கிறார்கள்.

ஐ ஐ எஃப் ஏ ராக்ஸ் இரவில் நடைபெற்ற நிகழ்வில் இந்த சூழல்= தி வோர்டெக்ஸ் என்ற தொடரை பார்வையாளர்களுக்காக பாலிவுட் நடிகர் அபிசேக் பச்சன் வழங்கினார். இந்நிகழ்விற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் இந்த தொடரில் நடித்த நடிகர்களுடன், அபிசேக் பச்சன் மற்றும் அமேசான் ஒரிஜினல்ஸில் இந்திய தலைவர் அபர்ணா புரோஹித், தலைவர் கௌரவ் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பார்வையாளர்களுடன் இவர்களும் ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் ஸ்னீக் பிக்கை திரையிடுவதைக் காண ஆர்வமாக காத்திருந்தனர். பின்னர் தமிழில் உருவான புலனாய்வு நாடகமான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் ஸ்னீக் பிக் திரையிட்டப்பட்டவுடன் உற்சாகமாக கரவொலி எழுப்பி, தங்களின் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பகிர்ந்து கொண்டனர்.

ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலீஷ், போர்த்துகிசீயம், ஸ்பானிஷ், அரபு, துருக்கி உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில், ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் விசாரணை பாணியிலான தொடரின் பிரிமீயர் ஜுன் 17 ஆம் தேதியன்று உலகளவில் வெளியிடப்படுகிறது.

‘விக்ரம் வேதா’ எனும் வெற்றிப்படத்தை வழங்கிய இயக்குநர்கள் புஷ்கர்=காயத்ரி ஆகியோரின் படைப்பு சிந்தனை, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் ஆகியோரின் திறமையான இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்த ‘சுழல்= தி வோர்டெக்ஸில்’நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *