அக்ஷய் குமார், கத்ரீனா கைப்,ரன்வீர் சிங்க், ஜாக்கி ஷெராப், குல்ஷன் குரோவர், அபிமன்யு சிங்க் நடிப்பில், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவான படம் ‘சூர்யவன்ஷி’.
1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பின் பொது 1000 கிலோ வெடி மருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அதில் 600 கிலோ மட்டும் பயன்படுத்தியதாகவும் மீதம் உள்ள 400 கிலோ எங்கு உள்ளது என்பது ஒருபுறம்.
மறுபுறம், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்க பட்ட காஷ்மீர் பகுதியை கட்டுப்படுத்தும் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஓமர் ரபீஸ் (ஜாக்கி ஷெராப்) அவரின் மகன் மற்றும் சில ஆட்களை சிலீப்பர் செல் போன்று டெல்லி,மும்பை போன்று பல இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
இவ்வாறு இரு பாதையில் கதைக்களம் காட்ட பட்ட நிலையில் தாற்போது இருக்கும் காலகட்டத்தில் ஆன்டி பாம் ஸ்குவாட் ஏஜென்ட் (அக்ஷய் குமார்) அவர்களுக்கு மும்பையில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
400 கிலோ வெடி மருந்தை கண்டுபிடித்தார்களா? சிலீப்பர் செல்ஸ் யாரென அறிந்தார்களா? குண்டு வேண்டிப்பு நிறுத்தப்பட்டதா? என்பது மீதி கதை.
படத்தின் முதல் பாதி முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்டது, இதனால் எந்த இடத்திலும் பிசிறு தட்டவில்லை. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கம்மெற்சியலாக இருந்தது அடி, உதை, துப்பாக்கி சத்தம் என கட்சிக்கு காட்சி ரசிக்க வைத்தது.
படத்தின் கிளைமாக்ஸ் சண்டையில் (ரன்வீர் சிங்க், அஜய் தேவ்கன்) இருவர் வந்த காட்சிகள் பட்டையை கிளப்பின. கத்ரீனா கைப் ஒரு புது பொலிவுடன் மிகவும் எளிமையாக நடித்திருந்தார். அணைத்து காமெடி காட்சிகளும் ரசிக்கும் வகையில் இருந்தது.
தமிழில் ஹிட் அடித்த படங்களை ஹிந்தியில் கையாளுவதில் வல்லவர் ரோஹித் ஷெட்டி சிங்கம் படத்தின் 3 பாகங்களையும் ரீமேக் செய்தவர், இந்த படத்தின் ஒரு சில கதை பகுதியும் துப்பாக்கி படத்தில் வருவது போன்று இருந்தாலும் அதை குறையின்றி எடுத்திருக்கிறார்.
ஜோமோன் டீ ஜான் ஒளிப்பதிவும்,தனிஷ்க் அவர்களின் ஒலியும் ஒன்றிணைந்து இருந்தது.
தமிழில் வெளியான அண்ணாத்த,எனிமி படங்களை காட்டிலும் தீபாவளிக்கு பெரிதாய் வெடித்திருக்கிறது சூர்யவன்ஷி.
சூர்யவன்ஷி – பிரகாசத்தின் பிரம்மாண்டம்