சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் லோக்கல்’. சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் இந்த படத்திற்கான சம்பளமாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை 11 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், மீதம் 4 கோடி ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக சிவகார்த்திகேயன் தரப்பில் சொல்லப்படுகிறது.
டிடிஎஸ் வழக்கு :
இந்த சூழலில் மேலும் 11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா அதனை வருமான வரித்துறைக்கு செலுத்தாமல் இருந்ததால் 91 லட்சம் ரூபாயை வருமான வரிக்கு செலுத்தும்படி தனக்கு வந்த நோட்டீஸை எதிர்த்து ஞானவேல் ராஜாவிற்கு எதிராக 3 வருடங்களுக்கு முன்பே வழக்கு தொடுத்திருக்கிறார் சிவ கார்த்திகேயன்.
சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்படும் பிரபலங்கள் :
தற்போது மீண்டும் தன்னுடைய 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தரும் படியும், அதுவரை ஞானவேல் ராஜா தயாரித்து வரும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ரிபெல், சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல, விக்ரம் நடிக்கும் சியான் 61 ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடு செய்யக்கூடாது.
அத்துடன் இந்தப் படங்களை திரையரங்கு மற்றும் ஓடிடி-யில் வெளியீடு செய்ய முடியாத அளவுக்கு வினியோக உரிமையை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிபதி கேள்வி :
இதனை விசாரித்த நீதிபதி ஏற்கனவே டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்வது ஏன்? என சிவகார்த்திகேயனிடம் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். 3 வருடங்களாக வழக்கு தொடராது ஏன் என்று உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வருவதால் சிவகார்த்திகேயன் தரப்பு பதில் இல்லாமல் நிற்கின்றனர்.
இவ்வாறு ஞானவேல் ராஜா மற்றும் சிவகார்த்திகேயன் இடையே நடக்கும் பிரச்சினையில் சம்பந்தமே இல்லாமல் விக்ரம், சிம்பு, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரின் படம் சிக்கலில் மாட்டியுள்ளது பரபரப்பளிக்கிறது.