சிவகார்த்திகேயனுக்கு தண்ணி காட்டிய அஜித்தின் புகைப்படம்;

தமிழ் திரையுலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருப்பது, “வாரிசு” மற்றும் “துணிவு” படங்களின் ரிலீஸ் தான். ஏற்கனவே, தனது பொங்கல் ரிலீஸை அறிவித்தது வாரிசு படக்குழு. விஜய்யுடன் போட்டியிடவே, அஜித் துணிவாக “துணிவு” படத்தின் மூலம் களமிறங்குகிறார் என பேச்சு அடிபட்டு வந்தது.

இந்நிலையில், படங்களின் ப்ரோமோஷனுக்காக பல விஷயங்களை அஜித் மற்றும் விஜய் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட போட்டோ;

அஜித் குமாருடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வளையதள பக்கத்தில் வெளியிட சிவகார்த்திகேயன், “நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் சாரை சந்திக்கிறேன். உங்கள் பாசிட்டிவான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி” என பதிவிட்டிருந்தார்.

ரோஸ்டில் சிக்கிய சிவகார்த்திகேயன்;

இதை கண்ட விஜய் ரசிகர்களோ, “எல்லா முயற்சியும் செய்துவிட்டு, கடைசியில் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயனை நாடியுள்ளாரா அஜித்” என்றும்.

அக்டோபர் மாதம் 25ம் தேதியன்று அஜித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை சம்பந்தமே இல்லாமல், இப்போது சந்தித்தது போல் பதிவிட வேண்டிய அவசியம் என்ன என்று சிவகார்த்திகேயனை வறுத்து எடுக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

என்னவா இருக்கும்?

குழந்தைகள் மத்தியில் மிக பேமஸாக இருப்பது விஜய் தான். விஜய்க்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடித்துவிட்டார் என்பது நிதர்சனமான உண்மை.

எனவே தக்க சமயம் வரும் வரை காத்திருந்து அஜித்துடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்தால், அனைத்து ரசிகர்களையும் தன் வசம் ஈர்க்கலாம் என்று நினைத்தாரா சிவா. என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

அட, இதல்லபா பிரச்சனை. சிவகார்த்திகேயன் மற்றும் அஜித் இருக்கும் போட்டோவை எடுத்த போட்டோக்ராபருக்கு சிவகார்த்திகேயன் மீது என்ன கோபமோ. அவர் ஒரு மாதம் கழித்து இந்த போட்டோவை சிவகார்த்திகேயனுக்கு அனுப்பியிருப்பாரோ? அதனால் தான் இவ்வளவு தாமதமோ என்பது சிவகார்த்திகேயனுக்கு தான் வெளிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *