SISU movie review

இந்தப் படத்தின் காலகட்டம் என்பது, வடக்குஃபின்லாந்தின் பின்னணியில், 1944 இல் நிகழ்வது போல்படமாக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சிப்பாயானAatomi Korpi (Jorma Tommila) என்பவரை மையப்படுத்திகதை நிகழ்கிறது. இப்படம், முதன்முறையாக டொராண்டோசர்வதேசத் திரைப்பட விழாவில், மிட்நைட் மேட்னஸ்(Midnight Madness)’ எனும் பிரிவில் திரையிடப்பட்டது. பின், ஜனவரி 27, 2023 அன்று ஃபின்லாந்தில் பிரத்தியேகமாகத்திரையிடப்பட்ட இப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி அன்றுஉலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கதைச்சுருக்கம் போரின்போது தனது குடும்பத்தையும்வீட்டையும் இழந்த Aatomi Korpi, லேப்லாந்தின் (Lapland) ஆளரவமற்ற பகுதியில் ஒரு தனிமையான வாழ்க்கைக்குள்தன்னைச் சுருக்கிக் கொள்கிறார். தங்கத்தைத் தோண்டிஎடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேஉள்ளார். அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீச, ஒரு பெரும்தங்கப் புதையல் அவருக்குக் கிடைக்கிறது. தங்கத்தைப்பாதுகாப்பாகச் சேமிக்க, 563 மைல் தொலைவிலுள்ளவங்கியை நோக்கிப் பயணிக்கிறார். வழியில், SS Obersturmführer Bruno Helldorf  (Aksel Hennie) என்பவரின் தலைமையில் இயங்கும் நாஜி வீரர்களால்பிடிக்கப்படுகிறார். அந்த நாஜி குழுவின் பணியே, எதிர்ப்படும் எவரையும் எதையும் கொன்று ஒழிப்பதே!  ஆனால், அந்த நாஜி குழுவிற்குத் தெரியாத ஒன்று, AatomiKorpi சாக விருப்பமில்லாத ஒரு தேர்ந்த வீரர் என்பதே அது! மூச்சடைக்க வைக்கும் சாகசத்தையும், எலும்புகள்உடைப்படும் ஆக்ஷனையும், நரம்புகள் தெறிக்கும்த்ரில்லிங்கான அனுபவத்தையும் காணத் தயாராகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *