சூர்யாவுக்கு ஆதரவும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. சமூகவலைதளங்களில் #WestandwithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்ல சில அரசியல் கட்சிகளும் சமூகவலைத்தளத்தில் ஆதரவு அளித்துவந்தார்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறியது இந்து மதம் பிடிக்கும் என்றால் தூக்கி கொண்டாடுங்கள் அது தவறில்லை. ஆனால் அடுத்த மதத்தினை தாழ்த்தி தன் மதத்தை பெரிது என கொண்டாடாதீர்கள் என கூறினார்.ஆனால் சூர்யா தரப்பினர் இதை திசை மாற்றி வேண்டுமென்றே சந்தானம் பக்கம் திரும்பி சாதி வெறியர் சந்தானம் என ட்ரெண்ட் செய்தார்கள்.

இதுமட்டுமில்லாமல் பல ஊடகங்கள் பிரபலங்கள் சூர்யாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார்கள். ஆனால் சந்தானத்திற்கு அப்படி இல்லை ரசிகர்கள் மற்றும் அவர் சார்ந்த சமூகத்தினர் ஆதரவு கொடுத்தார்கள்.
இதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவர் சூர்யா என அவரது ரசிகர்கள் பெருமைப்பட்டு வந்தநிலையில் அதற்கும் ஆப்படிக்கும் விதமாக வன்னிய குலத்தை சாந்தவர்கள் எதற்கும் துணிந்தவன் எதற்கு OTT யில் படம் ரீலிஸ் செய்தார். தியேட்டர்களில் ரீலிஸ் செய்திருந்தால் அவர் எதற்கும் துணிந்தவன் என சொல்லலாம் எனவும்எதற்கும் துணிந்தருக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு என வச்சு செய்துவிட்டார்கள்.