சஞ்ஜீவன் விமர்சனம் – (3/5)

 

அறிமுக இயக்குநர் மணி சேகர் இயக்க, வினோத், நிஷாந்த், சத்யா, யாசின் மற்றும் திவ்யா துரைசாமி நடிக்கும் படம் தான் சஞ்ஜீவன்.

கதைப்படி,

வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் ஐவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் வினோத் ஸ்னூக்கர் விளையாடுபவர். ஸ்னூக்கர் போட்டியில் எவ்வாறு வெற்றி பெறுகிறார்? மேலும், வினோத்தின் பிறந்த நாளை கொண்டாட நண்பர்கள் அனைவரும் இணைந்து ஏற்காடு செல்கின்றனர். செல்லும் இடத்தில் அங்கு என்ன நடந்தது? 4 மாதங்கள் இவர்களின் வாழ்வில் நடந்த மாற்றங்கள் என்னென்ன? என்பதை கூறுவதே படத்தின் மீதி கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் அனைவரின் நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களின் நண்பர்களோடு இருக்கும் உணர்வை தருகிறது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் நிறைந்ததாக இருப்பதால் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

கதையின் கரு வலிமையாக இல்லை என்றாலும், திரைக்கதை வசனம் படத்திற்கு உயிரோட்டம் தருகிறது. அதற்காக இயக்குநர் மணி சேகரை பாராட்டலாம். இருப்பினும் படத்தின் இரண்டாவது பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கார்த்திக் சொர்ண குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாகவும் அழகான காட்சி அமைப்போடும் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஸ்னூக்கர் விளையாட்டினை இவ்வளவு நேர்த்தியாக யாரும் இதுவரை கொடுத்ததில்லை என்று தான் கூற வேண்டும். ஸ்னூக்கர் டோர்னமெண்ட் கேமராக்கள் கூட இவ்வளவு அழகாக விளையாட்டை காட்சிப்படுத்துமா? என்பது ஆச்சர்யமே

வாழ்வியலை உயிரோட்டமாக கொடுத்து பார்ப்பவரையும் படத்துடன் ஒன்றி பயணிக்க வைத்த இயக்குநர் மணிசேகர் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

சஞ்ஜீவன் – பார்ப்பவரையும் பயணிக்க வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *