உள்ளூர் இல்லை உலக லெவல் பேமஸ் ஆகும் R.K.செல்வமணி!!!

கடந்த மாதம் ஜனவரி 25ம் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்காக இயக்குனர் திரு.K.பாக்யராஜ் மற்றும் இயக்குனர் திரு.R.K. செல்வமணி போட்டியிடுகின்றனர்.

முந்தைய தேர்தலில் திரு.R.K. செல்வமணி தலைவராக தேர்தெடுக்கப்பட்டு பின்னர் FEFSI சங்கத்திற்கும் தலைவரானார். தற்போதைய நிலையோ பெரும்பாலான இயக்குனர்கள்  R.K.செல்வமணி அவர்கள் மீது பெரும் அதிருப்தியில் இருப்பதாலும், எழுத்தாளர்கள் சங்கத்தில்  K.பாக்யராஜ் அவர்களின் நிர்வாகத் திறமையைக் கருத்தில் கொண்டும் இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் K.பாக்யராஜ் அவர்கள் தான் வெற்றி பெற போவதாக கிட்டத்தட்ட முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் R.K.செல்வமணி அவர்கள் தோல்வியடைந்தால் தற்போது அவர் வகித்து வரும் FEFSI சங்கத் தலைவர் பதவியும் பறிபோகிவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏனென்றால்,

23 கிராப்ட் ஒன்றாக சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் FEFSI. இதன் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால், 23 கிராப்ட்களில், ஏதேனும் ஒன்றில் தலைவராகவோ, செயலாளராகவோ அல்லது பொருளாளராகவோ இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும்பட்சத்தில், FEFSI சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியானவராக கருதப்படும். இந்நிலையில், 23 கிராப்ட்களில் ஒன்றான இயக்குனர்கள் சங்கத் தலைவராக தற்போது R.K.செல்வமணி இருப்பதால், FEFSI சங்கத் தலைவராக தற்போது இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

எனவே,மீண்டும் இயக்குனர் சங்க தேர்தலை நடத்துவதற்கு இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் சூழலில்.

பதவி பறிபோகும் அச்சத்தால் கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 18-25 நிமிடங்களுள் உருவாகும் குறும்படத் தயாரிப்பு மற்றும் வெளியீடுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆஜராகிறார் R.K.செல்வமணி. அது மட்டுமல்லாமல், அந்த குறும்படம் நல்ல தரத்திலும், கதைக் களத்தோடும் இருக்கும் பட்சத்தில் அதை சர்வதேச குறும்பட விருது விழாவிற்கு அனுப்பும் வேலையை தானே முன்னின்று நடத்தித்தருவதாக கூறியிருக்கிறார்.

மேலும், இதற்கு மேல் இயக்கவிருக்கும் இயக்குனர்கள் இம்மாத இறுதிக்குள் தங்களின் குறும்படங்களை இயக்கி முடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

R.K.செல்வமணி குறும்படங்களை சர்வதேச போட்டிக்கு அனுப்புவேன் என்று கூறியதும் ஒரு சிலர் வடிவேலு சொல்வதுபோல் ‘உலக லெவெல்ல பேமஸ் ஆகுறேன்’ என்னும் வசனங்களை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டும், ஒரு சிலர் இதற்கு வரவேற்பும் தெரிவிக்கின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அன்மையில் இயக்குனர் சங்க உறுப்பினர் வெங்கடேஷ்.C.பெருமாள் இயக்கியிருக்கும் “சுட்டி” என்னும் படத்தை வெளியிட வேலைகள் நடந்து வந்த நிலையில் அவருக்கு சக்கரை நோய் அதிகமாகி அவரின் காலில் 5 விரல்களை எடுத்து விட்டதாகவும்.

தினமும் மருந்துக்கு மட்டும் ரூபாய் 1500/- வரை செலவாகிறது எனவும் அதற்கு தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு R.K.செல்வமணியிடமும் மற்ற உறுப்பினர்களிடமும் வாட்சப் ஆடியோவில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இதை சற்றும் கண்டுகொள்ளாத R.K.செல்வமணி மற்ற வேலைகளை பார்த்து வருவது அவரின் மேல் உள்ள கோபத்தையும் எதிர்ப்பையும் அதிகமாக்கி வருகிறது.வரும் 27ம் தேதி இயக்குனர் சங்க தேர்தல். அதை மனதில் வைத்துதான் இந்த குறும்பட ஏமாற்று அறிவிப்பை இயக்குனர் செல்வமணி வெளியிட்டிருக்கிறார் எனவும் ஒரு தரப்பு கூறுகிறது.

மேலும் இவரின் வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே இருக்கும் நிலையில் இவர் எப்படி தேர்தலை எதிர்கொள்ள போகிறார்? வெற்றி வாகை சூடுவாரா? அல்லது இரண்டு சங்கத்தின் தலைவர் பொறுப்புகளில் நாற்காலியை காலி செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: திரு.கார்த்திக்(நாற்காலி செய்தி), திரு.ஆப்ரகாம் (கோடங்கி வாய்ஸ்), தமிழ் வீதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *