‘சலார்’ படத்தில் நடிக்கும் பிருத்விராஜின் வரதராஜ மன்னாரின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு

 

முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, ‘சலார்’ படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் கேரக்டர் லுக் போஸ்டர், அவருடைய பிறந்தநாளான இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சலார்’ படத்தைப் பற்றிய புதிய தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக பட குழுவினர், நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை வாய்ப்பாகக் கருதி, அவர் நடித்திருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத் தோற்றப் புகைப்படத்தை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

‘ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நட்சத்திர நடிரகான பிரித்விராஜ் சுகுமாரன், வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ‘சலார்’ படத்தைப் பற்றிய நேர் நிலையான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்’ என பட குழுவினர் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.

‘சலார்’ படத்தில் இடம்பெறும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரம், கதையின் நாயகனான பிரபாஸிற்கு இணையான கதாபாத்திரமாக படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் அற்புதமான நடிப்பை காண்பதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

பிருத்விராஜின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், ” பிருத்விராஜ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர், ‘சலார்’ படத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறு நடிகரை நாங்கள் பெற்றிருக்க இயலாது. படத்தில் அவர் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பொருத்திக்கொண்டு நடித்த விதம், அவரது அற்புதமான நடிப்புத் திறமையை நிரூபிக்கிறது. அவரது தனித்துவமான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரித்விராஜ், பிரபாஸுடன் இணைந்து நடித்திருப்பதும், இவ்விருவரையும் இயக்கியதும் அற்புதமான அனுபவம்” என்றார்.

‘கே ஜி எஃப் 2’ படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ், ‘சலார்’ படத்தில் இணைந்திருப்பது, இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது.

‘பாகுபலி’ நட்சத்திரமும், ‘கே ஜி எஃப்’ தயாரிப்பாளர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பக் குழுவினரும், ‘சலார்’ படத்தில் இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் கூடிய எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் பணியாற்றுவதால் இணையவாசிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்திய இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பிரசாந்த் நீல், ‘சலார்’ படத்தை இயக்குவதால் இந்த திரைப்படம், திரையுலக ரசிகர்களிடையே நம்பிக்கைக்குரிய படைப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பன்முக ஆளுமை திறன் கொண்ட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், வரதராஜ மன்னார் எனும் அற்புதமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பாகுபலி’ மற்றும் ‘கே ஜி எஃப்’ ஆகிய இரண்டின் கலவையாக ‘சலார்’ உருவாகி வருகிறது. ‘பாகுபலி’ படத்தின் நட்சத்திரமான பிரபாஸ், ‘கே ஜி எஃப்’ படத்தின் தயாரிப்பாளரான ஹோம்பாலே பிலிம்ஸ், கே ஜி எஃப் இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருடன் இணைந்து இந்திய ரசிகர்களுக்காக பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *