வலுவான அலை உருவாக ரஜினி வருவான்.. அரசியல் சுனாமி வரும்… – ரஜினி

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் ‘சாணக்யா’ என்ற யூடிப் சேனல் முதலாம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் நல்லக்கண்னு ஐயா, குமரி ஆனந்தன், இல கணேசன் உள்ளிட்டவர்களுடன் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துக் கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது…

முதலில் ரங்கராஜின் பாண்டேவின் பத்திரிகை துறை சாதனைகள் பாராட்டி பேசினார். அதன் பின்னர் அவரின் அரசியல் குறித்து பேசினார்.

அரசியலில் அலை முக்கியம். அதான் அலை உண்டாக வேண்டும்; இயக்கம் உருவாக வேண்டும் என்றேன்.

அப்போ இவரு வர மாட்டாரா? அதுவாக உருவாகனுமா? கேட்கின்றனர்.

எனவே ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன்.

சினிமாவில் ஜொலித்த எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வரானார்.

25 ஆண்டுகள், தி.மு.க.,வில் இருந்தார்; கருணாநிதி முதல்வராக, அவரும் மிகப்பெரிய காரணம் இருந்தார்.

திமுக.வில் பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

அவராக வெளியே சென்றிருந்தால் கூட அது சரியாக இருந்திருக்காது. அவரை வெளியேற்றிய பின்னர் ‘என்ன தவறு செய்தேன்; கணக்கு கேட்டது தப்பா’ என, கேட்டார். அனுதாப அலை வீசியது. முதல் முறையாக, தேர்தலில் வெற்றி பெற்றார்.

அடுத்து, 1991ல், காங்கிரஸ் கட்சியோடு மதிப்பிற்குரிய ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதால் தி.மு.க.,விற்கு எதிரான அலை வீசியது. முதன் முறையாக, ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

ஆந்திராவில், மூன்று முதல்வரை, இந்திரா காந்தி மாற்றிக் கொண்டே இருந்தார்.

‘ஆந்திராவை தெலுங்கர் ஆள வேண்டும்’ என, என்.டி.ராமராவ் கட்சி துவக்கினார். அலை உருவானது; அவர் முதல்வரானார்.எனவே, அலை முக்கியம்.

நான் கொஞ்ச நாள்களுங்க்கு முன், புள்ளி வைத்தேன். அரசியலில் புது புள்ளி போட்டேன். அந்த புள்ளி, தற்போது அமைதியாக, யாருக்கும் தெரியாமல், சுழலாக உருவாகி உள்ளது.

அதை யாரும் தடுக்க முடியாது. இது, மக்கள் மத்தியில் உருவான சுழல். அதை, வலுவான அலையாக மாற்ற, ரஜினிகாந்த் போவான். ரஜினிகாந்த் ரசிகர்களும் வருவார்கள்.

அந்த அலை, கரையை நெருங்க நெருங்க, தேர்தலை நெருங்க நெருங்க, அரசியல் சுனாமியாக மாறும். அது, ஆண்டவன் கையில் உள்ளது. அந்த ஆண்டவன், மக்களாகிய நீங்கள் தான்; நீங்கள் தான், அதை உருவாக்க வேண்டும்; அது உருவாகும்.

அப்போது அதிசயம் நிகழும். அற்புதம் நிகழும்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Political Tsunami will be come soon in Tamilnadu says Rajini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *