ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த படத்திற்கு நாங்கள் ‘பாட்டு அடி ஆட்டம் ரிப்பீட்டு’ என டாக் லைனை இணைத்திருக்கிறோம். இதனை இசையமைப்பாளர் இமானை சந்தித்தபோது சொன்னேன். அவரும் இதனை உணர்ந்து படத்திற்காக பத்து பாடல்களை இசையமைத்து வழங்கி இருக்கிறார். இந்த படத்தின் முக்கிய அம்சமே இன்னிசைதான். அதனை அதிரடியாக வழங்கி உற்சாகப்படுத்திய இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை வேதிகா. சிறந்த நடிகை மட்டுமல்ல அற்புதமான நாட்டிய கலைஞரும் கூட. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை சன்னி லியோன் எங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்த பரிசு. அவர் எப்போதும் பரபரப்பாகவே இருந்தார். இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தோம். அதன் பிறகு அவரை தொடர்பு கொண்டு மாஸ்டர் பிரபுதேவா உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று சொன்னோம். அவர் பிரபுதேவா என்று சொன்னவுடன் வேறு எதை பற்றியும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், நடன இயக்குநர், சண்டை பயிற்சி இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி ஆனந்த் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் திரையுலகில் நேர்மையாகவும், மரியாதையுடன் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள் என்பதை இந்த படத்தின் பணிகள் நடைபெற்ற போது தெரிந்து கொண்டேன். இதன் காரணமாகவே ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விரைவில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும்.
27 ஆம் தேதி இன்று திரையரங்கில் வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த திரைப்படம் ஃபேமிலி வித் மியூசிகல் என்டர்டெய்னர். பத்து வயது முதல் அறுபது வயது வரை உள்ள அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ” என்றார்.
இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ” கேரளாவில் இருந்து கிளம்பி தமிழ் திரையுலகத்திற்கு வருகை தந்து, இந்த திரைப்படத்தை இந்த குழு உருவாக்கி இருக்கிறது. இதற்காக முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் இயக்குநர் சினு என்னை சந்தித்து, ‘பிரபுதேவா மாஸ்டர் – பாட்டு, அடி, ஆட்டம், ரிப்பீட்டு’ என சொன்னதுடன் மியூசிக்கல் என்டர்டெய்னர் எனக் குறிப்பிட்டார். இதை சொல்லும்போது சுவாரசியமாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெற்ற கொண்டிருந்த தருணத்தில்.. இசைப்பணியும் நடைபெற்றது. படத்திற்கு அந்தந்த தருணங்களில் பாடல்கள் அவசியம் என்று சூழல் உருவானது. அதற்காக இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டு இருந்தோம். படத்திற்கு பின்னணி யிசையையும் நிறைவு செய்து இருக்கிறேன். அதில் ஏராளமான திரைப்பட பாடல்கள் சின்ன சின்னதாக இடம் பிடித்திருக்கிறது. லைட் ஹார்ட்டட் ஃபிலிமாக உருவாக்கியிருக்கிறது. இந்த திரைப்படம் இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவு தேவை.
நான் பிரபுதேவா மாஸ்டரின் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி. வேதிகா மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ” இந்நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநரும் மேடையில் பேசினார்கள். ஒருவர் தமிழிலும், மற்றொருவர் மலையாளத்திலும் பேசினார்கள். அவர்களின் பேச்சு அனைவருக்கும் புரிந்தது. இதற்காக அவர்கள் இருவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். நான் எழுதிய பாடலுக்கான காட்சியாக்கம் வியப்படையச் செய்தது.
இயக்குநர் சினு அற்புதமான மனிதர். அவருக்கு முழுமையாக தமிழ் தெரியவில்லை என்றாலும்… பாடல் வரிகளை ரசித்தார். அவருடைய ரசனையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
இசையமைப்பாளர் இமானின் தொடக்க காலகட்டத்தில் இருந்து அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். எல்லா விதமான பாடல்களையும் வழங்கி தமிழ் திரையுலகில் இன்று மிக முக்கியமான இடத்திற்கு உயர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து தொடர்ந்து பாடல் எழுத வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது.
பிரபுதேவா மாஸ்டர் நடித்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்ற படத்தில் தான் அவருக்காக பாடலை எழுதத் தொடங்கினேன். நடிகராக இருந்த அவர் இயக்குநராக உயர்ந்த பிறகும்.. அவர் நடன இயக்குநராக பணியாற்றும் படங்களிலும்.. என ஏராளமாக பாடல்களை எழுதியிருக்கிறேன்.
வெகு சில நடிகர்கள் மட்டும்தான் பாடல்கள் குறித்து பாடலாசிரியருடன் தொடர்பு கொண்டு தங்களது கருத்துகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அதில் பிரபு தேவா மாஸ்டர் முக்கியமானவர். அவருக்கு பாடலாசிரியர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் பிரபுதேவா பேசுகையில், ” இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம்.. என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருந்தது. ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, பக்ஸ், வையாபுரி, ஜே பி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷமாக இருந்தது.
சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக நேர்த்தியாகவும் , திறமையாகவும் திட்டமிடுகிறார். பயங்கர புத்திசாலி. அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தால் உச்சம் தொடுவார்.
தயாரிப்பாளரும், இயக்குநரும் மிகச் சிறந்த நண்பர்கள். அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றவும், பயணிக்கவும் விரும்புகிறேன்.