ஜனவரியில் கட்சி தொடக்கம் டிச.31 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் – ரஜினிகாந்த்
ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம் என்றும், இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் அற்புதம், அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் உறுதியாக கூறியிருக்கிறார்.
ஜாதி, மதச்சார்பற்ற ஆன்மீக சார்பற்ற
தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்.