லிங்கா, சம்பிகா, குமரவேல், கனிகா, வினோத் சாகர், ஸ்ரீ கிருஷ்ணா தயாள் நடிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான வெப்-சீரிஸ் “பானி பூரி”.
இந்த சீரிஸ்-ஐ நீங்கள் “SHORTFLIX” ஓடிடி தலத்தில் கண்டு மகிழலாம்.
கதைப்படி,
நாயகி சம்பிகாவின் தோழி ஒருவர், பல வருடங்களாக காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறார். அந்த திருமணம் சில மாதங்களிலே முடிவுக்கு வருகிறது.
அப்போது, காதலர்களாக இருக்கும் லிங்காவும் சம்பிகாவும் திடீரென பிரேக் அப் செய்கின்றனர். அதற்கு காரணம், காதலிக்கும் போது இருக்கும் அன்பு, திருமணத்திற்கு பின்பு இருப்பதில்லை என்பதை சம்பிகா உணர்ந்தது தான்.
மனம் உடைந்த லிங்கா, சம்பிகாவின் வீட்டிற்கு வந்து பேச வருகிறார். சம்பிகாவின் தந்தை குமரவேல், இந்த காதல் விவகாரத்தில் தலையிட்டு ஒரு முடிவு கூறுகிறார்.
அந்த முடிவு என்னவென்றால், லிங்காவையும் சம்பிகாவையும் 7 நாட்கள் தனியாக ஒரு வீட்டில் லிவிங்க் டூ கெதர் முறையில் வாழ சொல்கிறார். 7 நாட்கள் கழித்து இருவரின் காதல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் என்று கூறி அனுப்பி விடுகிறார்.
இந்த முடிவை ஏற்றுக் கொண்ட இருவரும் தனி ப்ளாட் ஒன்றில் குடியேறுகின்றனர். 7 நாட்கள் கழித்து இவர்களின் காதல் எப்படியானது.? சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை…
சமீபத்தில் பல வெற்றிக்கதைகளை தேர்ந்தெடுக்கும் லிங்கா. இம்முறை வித்யாசமான மற்றும் நடைமுறையிலுள்ள ஒரு கதையை தேர்வு செய்து நடித்துள்ளார்.
இதற்கு முன் அவர் நடித்த பாத்திரத்திலிருந்து மாறுபட்டு இப்படத்தில் நடித்துள்ளார் லிங்கா. அதிக எமோஷனை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்து அதற்கு சிறப்பு சேர்த்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
பெண்களுக்கு எப்போதும் இருக்கும் ஒரு சந்தேகம், உடைமை, பயம் என அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் சம்பிகா.
காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அவ்வப்போது மக்களை எண்டர்டெய்ன் செய்த நடிகர் பாலாஜி வேணுகோபால் இந்த இனைய தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டுள்ளார்.
சில லிவிங்-டு-கெதர் சீன்கள் நாம் இதற்கு முன் பார்த்திருந்தாலும். இக்காலத்திற்கேற்ப ஒரு அட்வான்ஸ்ட் கதையை தான் இயக்கியுள்ளார் பாலாஜி.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், முகம் சுழிக்கும் படியான காட்சிகள் இன்றி குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக அமைத்திருக்கிறார் பாலாஜி.
எட்டு எபிசோடுகளையும் தொய்வின்றி இயக்கியது இத்தொடருக்கு பலமாக அமைந்துள்ளது.
மனதை நெருடும் நவ்நீத் சுந்தரின் இசை, காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. ப்ரவீன் பாலுவின் ஒளிப்பதிவு சிறப்பு.