அது எப்படி திமிங்கலம்? ஒரே ஆளு ரெண்டு அரசு வேலைல

சங்கரன் கோவில் அருகே இரண்டு அரசு அலுவலகங்களில் ஒருவர் பணி புரிந்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நறுக்கிய உள்ள துரைசாமியார்புரத்தை சேர்ந்தவர் சேவியர் 50 வயதான இவர் அரசு உதவி பெரும் தனியார் தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்துவந்தார் அதே நேரம், அதே கிராமத்திலுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராகவும் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில் அதே ஊரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், பால் கூட்டுறவு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தார், அதில் சேவியரின் இரண்டு அரசு பணிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார், அப்போது அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதில் சத்துணவு அமைப்பாளராகவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராகவும் அவர் பணியாற்றி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் இரண்டு அரசு பணிகளில் வேலைபார்த்து வந்தது உறுதியானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டிடுகிறது, அதே நேரம் அவர் இதுவரை வாங்கிய சம்பளமாக பெற்ற பணத்தை திரும்ப பெற வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கபட்டுள்ளது. ஏற்கவனே அரசு வேலையை மறைந்து பிரதமரின் கிஷான் திட்டத்தின் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வந்த 2000 ரூபாய் பணத்தை சேவியர் பெற்று வந்துள்ளார். இது சம்பந்தமாக புகார் அளித்ததன் அடிப்படையில், விவசாயி என கூறி பெற்ற 16,000/- ரூபாய் பணத்தை சேவியர் மீண்டும் அரசுக்கு திருப்பி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *