ஓ மை டாக் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழுவினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான விஷயங்கள் :
இயக்குனர் ஷரோவ் ஷண்முகம் பேசியபோது,
இந்த படம் வால்ட் டிசனீப் போன்று குழந்தைங்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த படத்தின் கதையை எழுத ஆரம்பித்தேன்.
சூர்யா சாரிடம் கதை சொன்ன பொது அவர் கதை நன்றாக இருக்கிறது நீங்கள் அருண் விஜய் சாரிடம் கதையை சொல்லுங்கள் அவரும் அர்னவ் இருவரும் ஒப்புக்கொண்டால் நான் இந்த படத்தை எடுக்கலாம் என்று கூறினார்.
இந்த கதையை ஒப்புக்கொண்டதுக்கு அருண் விஜய் மற்றும் அர்னவ் அவர்களுக்கு நன்றி. விஜய் குமார் சார் அவர்களுக்கு நன்றி. அவரை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் பெருமை.
இந்த வருடத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை அர்னவ் அவர்களுக்கு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். என்றார்.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் பேசியபோது,
இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. காரணம், மூன்று தலைமுறை கலைஞர்கள் ஒரே படத்தில் என்பது தான். என்றார்.
ஸ்டண்ட் சில்வா பேசியபோது,
அருண் விஜய் சார் அவர்களுக்கு சண்டை காட்சிகளை இயக்குவது கண்டினமாக இருக்கவில்லை, ஆனால் அதை விட அர்னவ் என் வேலையை சுலபமாகிவிட்டார். அர்னவ் அவ்வளவு அழகாக சண்டையிடுகிறார்.
சிவ குமார் அப்பாவின் மிக பெரிய ரசிகன் நான், அவரின் புத்தகங்கள் எனக்குள் சில மாற்றங்களை செய்தது. வாய்ப்பளித்த சூர்யா சார் அவர்களுக்கு நன்றி என்றார்.
அர்னவ் அருண் விஜய் பேசியபோது,
என்னை முதல் முதலில் இந்த படத்திற்கு தேர்வு செய்தது, சூர்யா மற்றும் ஜோதிகா ஆன்டி அவர்கள் தான். அவர்களுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்தில் தாத்தா மற்றும் அப்பாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் பணியாற்றய அனைவரும் என்னை அரவணைப்புடன் பார்த்து கொண்டனர். அனைவரும் ஓ மை டாக் படத்தை அமேசான் ப்ரைமில் காணுங்கள். அனைவரின் ஆசிர்வாதமும் எனக்கு தேவை. அனைவரும் என்னை வாழ்த்த வேண்டும் என்றார்.
சிவ குமார் – விஜய் குமார் பேசியபோது,
சிவ குமார் : இந்த படத்தை பிரமாதமாக இயக்கியுள்ளார் சரோவ் அவர்கள், நான் இயக்குனர்களிடம் நிறைய திட்டு வாங்கியுள்ளேன். ஆனால் இவர் இதனை குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் பொறுமையாக அவர்களை கையாண்டது மிகவும் கடினமான ஒன்று.
விஜய் குமார் பற்றி பேச வேண்டுமென்றால், அவர் வயதில் என்னை விட 4 வயது சின்னவர் ஆனால் நடிப்பில் என்னை விட அதிக அனுபவம் வாய்ந்தவர். எனக்கு முன்னதாக இவர் துறைக்கு வந்துவிட்டார் அப்போது இவரின் பெயர் சிவ குமார் தான் நான் வந்த பிறகு தான் பெயரை மாற்றி விஜய் குமார் என்று கொண்டார் என்றார்.
விஜய் குமார் : 2D எண்டர்டெயின்மெண்ட் எப்போதும் நல்ல கதையையே படமாக்கி வருகின்றனர், அது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் ஓ மை டாக் மிகவும் சிறந்த படம். இப்படத்தின் பூஜையின் போது சிவ குமார் ‘ இது மிகவும் சிறந்த வாய்ப்பு மூன்று தலை முறையும் ஒன்றாக நடிக்க போகிறீர்கள்’ இந்த வாய்ப்பை தவற விடாதே என்றார். நானும் அதே போல் என் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளேன்.
என் பேரன் அர்னவ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது மற்றவர்களிடம் இந்த படத்திற்கு நான் தான் முக்கிய கதாபாத்திரம். என் அப்பா மற்றும் தாத்தா சைடு கேரக்டர் தான் என்று கூறியிருக்கிறார். அவர் மிக பெரும் நட்சத்திரமாக வளம் வர வேண்டும் என் மகனை இந்த அளவிற்கு வளர்த்தது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் தான். அதே போல் அர்னவிற்கும் உங்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என்றார்.
அருண் விஜய் பேசியபோது,
எதிர்ச்சியாக உருவான ஒரு அருமையான வாய்ப்பு தான் இந்த படம். இந்த படத்தின் கதையை தாண்டி என் மகனுக்காக தான் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன். என்னுடன் நடிப்பதை விட என் அப்பாவுடன் நடித்ததே என் மகனுக்கு மிக பெரும் அதிர்ஷ்டம் என்று நம்புகிறேன். இந்த படம் முழுக்க முழுக்க அர்னவின் குறும்பு தனத்தை காணலாம். அனைவரும் இந்த படத்தை பார்த்து மகிழுங்கள். என்றார்.