ஸ்ரீநிதி திருமலா மற்றும் வயாகம் 18 இணைந்து இப்படத்தை தயாரிக்கும் படம் நித்தம் ஒரு வானம். அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்க, ர.கார்த்திக் இயக்கியிருக்கிறார். கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம்.
கதைப்படி,
இரட்டை கதைகளை சுவாரசியமாகவும், உணர்வு பூர்வமாகவும் கொண்டுள்ளது இப்படம். தன்னம்பிக்கை அற்றவராக இருக்கும் அசோக்செல்வனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் நின்றுவிடுகிறது. இதனால் மேலும் மனம் உடைந்து வாழ்க்கையின் மீது விரக்தி அடைகிறார்.
இறுதியில் அசோக் செல்வன் தன்னம்பிக்கை அடைந்தாரா? திருமணம் நடந்ததா? இரண்டு கதைகள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை.
அசோக் செல்வனின் நடிப்பு வழக்கம்போல் அனைவரையும் ரசிக்கும் விதமாக உள்ளது. மூன்று வித பாத்திரங்களிலும் கச்சிதமாக நடித்திருக்கிறார். சண்டே காட்சிகளில் அதிரடியாகவும் காதல் காட்சிகளில் இனிமையாகவும் நடித்து ரசிக்க வைக்கிறார்.
ரித்து வர்மா, ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி என மூவரும் அவர் ஒரு பாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார்கள்.
இசையை விட ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.
பஹத் பாசில் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான “நார்த் 24 காதம்” படத்தின் ஒன் லைனை இயக்குனர் ர.கார்த்திக் வேறுவிதமாக பயன்படுத்தியுள்ளார். மேலும், பாடல்களை அளவாக கொடுத்திருந்தால் கதையில் மந்தம் இருந்திருக்காது. இருந்தாலும் ஒரே படத்தில் 3 கதைகளை சிந்தித்து இயக்கிய ர.கார்த்திக்கு பாராட்டுக்கள்.
ஒரு சில படங்கள் தான் வாழ்க்கை பற்றிய ஏதோ ஓர் புரிதலை ஏற்படுத்தும். அந்த வரிசையில் இப்படமும் சேரும்.
நித்தம் ஒரு வானம் – சப்தம் இல்லாத காதலின் நாதம்