*நயன்தாராவின் கனெக்ட் படத்தில் ஆன்லைனில் பேயோட்டும் அதிசய சாமியார்*

நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் ‘கனெக்ட் ‘ படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், இந்தி நடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் குறித்து பேசினார் இயக்குநர் அஸ்வின் சரவணன்…

“இதுவும் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் வழக்கமான ஆவி கதைகளில் இருந்து இந்தப்படம் மாறுபட்டது.கொரோனா ஊரடங்குக் காலத்தில் எல்லோரும் தனித்தனியாக வீட்டுக்குள் இருந்த காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை.

பதினைந்து வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா இதில் நடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கு நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால்,. இதை அவர் விரும்பியே செய்தார். படமாகப் பார்க்கும்போது நயன்தாராவுக்கு இந்த வேடம் மிகப் பொருத்தமானதாக தோன்றும். அத்துடன் மிக நல்ல பெயரையும் அவருக்கு பெற்றுத்தரும்.

 

இதில் ஆன்லைன் மூலம் பேயுடன் உரையாடும் உத்தி புதிதாக இருக்கும். இந்திநடிகர் அனுபம்கெர் பேயோட்டியாக அந்த வேடத்தில் நடித்திருக்கிறார். நடித்தது மட்டும் அல்லாமல் இந்த படத்தை பாராட்டியும் இருக்கிறார்.

இவர்களுடன் இந்த படத்தில் சத்யராஜ், வினய், ஹனியாநபிசா உள்ளிட்ட தெரிந்த முகங்கள் நடித்திருக்கிறார்கள் அவர்களது அனைவரின் பாத்திரங்களும் பேசப்படுவதாக இருக்கும்.

ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அந்தப் படத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை படம் முடிவடைந்ததும் இருக்குமா என்பது கேள்விக்குறிய விஷயம் ஆனால் இந்த படத்தை அதிக பொருள் செலவில் தயாரித்திருக்கும் விக்னேஷ் சிவன் படத்தை பார்த்து பாராட்டியதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

வழக்கமாக ஆவி கதைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பயத்தை தரும். உளவியல் ரீதியாக இது போன்ற ஆவி படங்களை பார்ப்பது கூட்டமாக உட்கார்ந்து ஆவிகள் மீதான பயத்தை போக்கிக் கொள்ள உதவும்.

இடைவேளை இல்லாமல் ஓடக்கூடிய இந்த படத்தை மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்..!”

கனெக்ட் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *