புரமோஷனைத் தவிர்ப்பதால் 5 கோடி இழக்கும் நயன்தாரா?

சமீபத்தில் திருமணமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது, அட்லி இயக்கும் பாலிவுட் திரைப்படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நயன்தாரா, இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவார் என்றே சொல்லலாம்.

நயன்தாராவுக்கு ஜவான் படத்திற்காக 4 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் படத்தை முடித்த பிறகு நயன்தாராவின் 75-வது படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். இதனைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான தினமே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினை மையமாக கொண்ட ஒரு சப்ஜெக்டாக உருவாக உள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரனின் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் N75 என்று தலைப்பிடப்படாத படத்தில் நடிக்க உள்ளனர். மேலும், இப்படத்திற்கு “அன்னபூரணி” என்று பெயரிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். இதுவரைக்கும் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட், டோலிவுட்டில் பூஜா ஹேக்டே ஆகியோர் மட்டுமே 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால் நயன்தாரா தனக்கும் 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு தயாரிப்பாளர் நயன்தாரா சம்பளத்தை குறைத்து 5 கோடி ரூபாய் கேட்கும்படி கூறியுள்ளார். அதாவது 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் தாங்கள் நடிக்கும் பட புரமோஷனில் கலந்துகொள்கிறார்கள். அதற்காக அவர்கள் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள்.

ஆனால் நயன்தாரா தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மட்டும் தான் புரமோஷன் செய்கிறார். மற்ற தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்கும்போது புரமோஷனில் கலந்துகொள்வதில்லை. பிறகு எதற்காக நயன்தாராவுக்கு 10 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என வெளுத்துவங்கியுள்ளனர்.

மேலும், தொடர் தோல்வியை சந்தித்துவரும் ஆர் ரவீந்திரனின் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப்படத்தின் மூலமாவது மீண்டெழுமா? என்றகேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *