தொடர் தோல்வியில் நயன்தாரா; கை கொடுக்குமா கனெக்ட்;

தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என படுபிஸியாக, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருந்தார் நயன்தாரா. கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கு 2022 ஆண்டு சினிமா வாழ்க்கையில் சற்று பின்னடைவு தான்.

ஆனால், அவரின் இல்வாழ்க்கையோ அவருக்கு திருமணம், இரட்டை குழந்தைகள் என இரட்டை மகிழ்ச்சியை தான் தந்துள்ளது. அதுமட்டுமின்றி, 2022ம் ஆண்டு துவக்கத்திலேயே 100 கோடி ரூபாய் பிஸ்னஸ் காண்ட்ராக்ட் என அவரின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்கள் தன.

லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வாரா நயன்தாரா?

சினிமாவை பொருத்தவரை இந்த வருடம் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரவேற்பை பெற்றிருந்தாலும் நயன்தாராவை விட சமந்தாவை தான் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

ஏனென்றால் எடையை குறைக்கிறேன் என்று நயன்தாரா அநியாயத்திற்கு ஒல்லியாக பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் இருந்தது தான் அதற்கு முக்கிய காரணம். அதைத்தொடர்ந்து அவர் சோலோ ஹீரோயினாக நடித்திருந்த O2 திரைப்படதிற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில்லை.

மேலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இவர் நடித்த காட்பாதர் திரைப்படம் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் நேர்மாறாக அந்த திரைப்படமும் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யவில்லை. இப்படி தமிழ், தெலுங்கு அவருக்கு தோல்வியை கொடுக்க. மலையாளத்தில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்டு திரைப்படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அதுவும் தோல்விப்படமே.

இப்படி இந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் அவருடைய மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி விட்டுள்ளது. இருப்பினும் டிசம்பர் 22ம் தேதி வெளியாகவுள்ள “கனெக்ட்” திரைப்படத்தை ரொம்பவும் எதிர்பார்த்து வருகிறார் நயன்தாரா. ஆனால், சமீபத்தில் வெளியான அதன் ட்ரெய்லரே ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

இப்படி தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி இனி தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், அடுத்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படங்களின் மூலமாக பீனிக்ஸ் பறவையாக மீண்டும் நயன்தாரா வருவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *