படத்தின் விளம்பரத்திற்காக நாக சௌர்யா எடுத்த புதிய முயற்சி

 

இந்திய திரையுலகில் முதல் முறையாக – கிருஷ்ணா விருந்தா விஹாரி படத்தின் விளம்பரப் பணிகள் “பாத யாத்ரா” மூலம் நடந்து வருகிறது.

 

நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதில் அதிக ரிஸ்க் எடுப்பதில்லை, இருப்பினும் அவர்கள் வழக்கமான அல்லது தனித்துவமான விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். ஆனால், இம்மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் தனது கிருஷ்ண விருந்தா விஹாரி படத்திற்கு மிகப்பெரிய மைலேஜ் தர வேண்டும் என்று ரிஸ்க் எடுக்க முடிவு செய்துள்ளார் நாக சௌர்யா. திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினம் வரை மொத்தம் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது.

அவர் எடுத்த ரிஸ்க் ஆந்திராவில் மாநிலம் தழுவிய பாதயாத்திரை. இது திருப்பதியில் ஆரம்பித்து இப்போது விஜயவாடாவை (நாள் 3) அடைந்துள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் ஊடகங்களுக்கு ஆச்சரியமாக, மழை பெய்தாலும் நாக சௌர்யா ஓய்வு எடுக்கவில்லை. பார்ப்பவர்கள், ‘சௌர்யா, என்ன ஒரு அர்ப்பணிப்பு!’ என்கிறார்கள்.

ஐரா கிரியேஷன்ஸ் சார்பில் உஷா முல்பூரி தயாரித்துள்ள இப்படத்தை அனிஷ் ஆர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஷெர்லி செட்டியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *