பரபரப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகும் ‘நடுவன்’ – விரைவில் SonyLIV-ல்…

SonyLIV-தளத்தில் வெளியாகும் திரில்லர் திரைப்படம் நடுவன்!

நீங்கள் மனதார நேசிக்கும், நம்பும் நபர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வீர்கள்? அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களா அல்லது அவர்களின் குற்றத்தை சொல்லி எதிர்ப்பீர்களா?

SonyLIV-தளம் மற்றுமொரு பரபரப்பான கதையைக் ரசிகர்களுக்காக கொண்டு வந்துள்ளது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான “நடுவன்” படத்தை SonyLIV தங்களது தளத்தில் வெளியிடவுள்ளது. வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாப்பாத்திரமான பரத் நிவாஸ் பாத்திரத்தின் பயணம் தான் இப்படம்.

“நடுவன்” (மத்தியதர வாழக்கை வாழும் ஒருவன்) தன்னை ஏமாற்றியவர்களின் யதார்த்தத்தை உணரும் ஒரு இளம் தந்தையின் கதை. ஏமாற்றத்தின் பின்னணியில், ​​அவர் தனது அறியாமையை உணர்ந்து, தன்னை ஏமாற்றுபவர்கள் ஏன் அந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய முயற்சிக்கிறார்.

அவர்கள், அவர்களது விருப்பத்தின் பேரில் செய்கிறார்களா அல்லது கட்டாயப்படுத்தப்படுகிற சூழ்நிலையில் தவறிழைக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார். கதாநாயகன் அந்த பாதையில் செல்லும்போது, ​​ சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நேசித்து நம்பியவர்களின் ஏமாற்றுதல் மற்றும் வஞ்சத்தை அவர் கண்டுபிடித்து சமாளிக்க வேண்டும்.

இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில், அவர் செல்லும் போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. ஆனால் இந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவாரா, அல்லது அவர் நேசிப்பவர்களுக்காக தனது அறியாமைக்கு அடிபணிவாரா? என்பதே கதை.

தயாரிப்பளார் Lucky Chhajer படம் குறித்து கூறியதாவது,

வாழ்வில் முடிவுகளை எடுப்பது என்பது ஒரு சிக்கலான செயல். வஞ்சம் எப்படி ஏமாற்றமாக மாறுகிறது, யாரோ ஒருவர் அதை எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்பதை நடுவன் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இந்த படம் எனது முதல் படம் மட்டுமல்ல, மனித அனுபவத்தையும் கூறும் கதை என்பதாலும் இந்த திரைப்படத்திற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். SonyLIV-ல் திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

விரைவில் SonyLIV-ல் நடுவன் திரைப்படம் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *