கொரோனாவின் தாக்கத்தை பற்றிக் கூறிய “மூடர்”

கொரோனவின் தாக்கத்தை சொல்லிய “மூடர்”

சில நேரங்களில், சில படங்கள் உண்மை தன்மைக்கு பக்கத்தில் ஜெராக்ஸ் எடுத்தது போல அமைந்து விடும். அப்படி சம காலத்தில் கொரோனா நோயினால் உலகமே துவண்டு கிடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட “மூடர்” பைலட் பிலிம், சிலர் சொந்த சுயலாபத்திற்காக வைரஸ் கிருமிகளை பரப்புவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

சமகாலத்தில் இன்றைய காலகட்டத்திற்கு இந்த படம் உண்மையை உலகிற்கு உரக்க சொல்வது போல இயக்கியிருக்கிறார் தாமோதரன் செல்வகுமார்.

பல அரசியல் கட்சிகளின் மிரட்டல்களுக்கு பிறகு இணையத்தில் வெளியான இந்த “மூடர்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து இயக்குனர் தாமோதரன் செல்வகுமார் முழு நீள படமாக இயக்கப் போகிறார். அதற்கான அடுத்தகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

மூடர் பைலட் பிலிமில் நடித்தவர்கள் கார்த்தி, அனிஷா, சசிதரன், ஆர்த்தி சுபாஷ், மதன் கோபால், வினோத் லோகிதாஸ், பிர்லாபோஸ், சக்திபோஸ், உறியடி 2 சசிக்குமார், சிவக்குமார் ராஜ், சிவக்குமார் T.

ஒளிப்பதிவு: கலைசக்தி

இசை: JC ஜோ

எடிட்டிங்: M.K.விக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *