மெய்படசெய் விமர்சனம் – (3.5/5)

ஆதவ் பாலாஜி, மதுனிகா, சுந்தர், பி.ஆர்.தமிழ் செல்வம் நடிப்பில், வேலன் இயக்கியுள்ள படம் “மெய்ப்படசெய்”.

கதைப்படி,

நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலர்கள்.

வழக்கம்போல காதலுக்கு பெண்ணின் வீட்டில் பிரச்சனை வருகிறது. அதற்கு காரணம், தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வன்.

எனவே காதல் ஜோடி திருமணம் செய்து ஊரை விட்டு சென்னைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு துணையாக 3 நண்பர்களும் செல்கின்றனர். அங்கு தங்கும் வாடகை வீட்டினால் பெரிய பிரச்சனை வருகிறது.

அந்த பிரச்சினையை எதிர்த்து போராடி வில்லன் கும்பலுக்கு தண்டனை வாங்கி கொடுக்க களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை…

ஆதவ் பாலாஜிக்கு இதுதான் முதல்படம் என்பது போல் இல்லாமல் ரொமான்ஸ், ஆக்சன் என முயச்சித்துள்ளார். அவரின் முயற்சியும் வீண் போகவில்லை.

மதுனிகா தன் யதார்த்த நடிப்பால் கவர்கிறார். தாய்மாமனாக வந்த பி.ஆர்.தமிழ் செல்வன் அடாவடி வில்லனாக அதகளபடுத்தியுள்ளார்.

ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, பயில்வான் ரங்கநாதன் & நாயகனின் நண்பர்கள் அனைவரும் கச்சிதம்.

பரணியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் தேவை.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் கேமராவில் பாடல் காட்சிகளும் ஆக்சன் காட்சிகளும் ரசிக்கும் படமாக்கியுள்ளார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாலியல் குற்றங்கள் படங்கள் நிறைய வருகின்றன. அந்த வரிசையில் இந்த படமும் இணைந்து இருக்கிறது. அதே சமயம் பாலியல் குற்றங்களுக்கான தீர்வையும் இயக்குனர் வேலன் சொல்லி இருப்பது கவனம் பெறுகிறது.

மெய்படசெய் – அறம்செய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *